பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 233 நேராமல் கடவுள் காப்பாற்றி rேமமாக ஊரில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று தான் தனது இஷ்ட தெய்வங்களை இரவு பகல் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதி யனுப்பினாள். அதைப் பெற்ற கலியாணசுந்தரம் திரும்பவும் அந்த மாதரசிக்கு இன்னொரு கடிதம் எழுதியனுப்பினான். அது முந்திய கடிதத்தைக் காட்டிலும், பன்மடங்கு அதிக உருக்கமும் வாத்சல்யமும் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும், நிரம்பவும் சுருக்கமாகவும் அம்மாளு, தனம் முதலியோரைப் பற்றிய விஷயமே இல்லாததாகவும் இருந்தது. அதுவுமன்றி, அதன் பிறகு தான் மறுபடியும் சில தினங்களில் கடிதம் எழுதித் தனது விலாசத்தைத் தெரிவிக்கிற வரையில் தனக்கு மறுமொழி எழுத வேண்டாம் என்றும் அவன் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். ஆகவே, ஷண்முகவடிவு அவனது அடுத்த கடிதம் எப்போது வரும் வரும் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள். அவ்வாறு சில் தினங்கள் கழிந்தன. கோலாப்பூரிலிருந்து கடிதம் வரவில்லை; ஒவ்வொரு நாட் காலையிலும் தபாற் காரன் எப்போது வருவான் வருவான் என்று வழிபார்த்துப் பார்த்து, ஒவ்வொரு நாளும் ஏமாற்றமடைந்து ஏங்கித் தவிக்கலானாள். பல நாட்கள் கழிந்தன. ஒரு வாரமும் கழிய, ஒரு பகrமும் ஒழிந்தது. அப்போதும் கடிதம் வரவில்லை. தனது ஆருயிர்க் காதலருக்கு இடைவழியில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ, அல்லது அம்மாளு, தனம் முதலியோர் ஏதேனும் பொல்லாங்கு இழைத்திருப்பார்களோ என்று அந்த நற்குண அணங்கு பலவாறு சிந்தித்து உருகி இரவு பகல் அதே நினைவாக இருந்து உழன்று ஆறாத்துயரத்தில் அழுந்திப் போனாள். மூன்று வார காலமும் கழிந்து, சுமார் ஒருமாத காலமாயிற்று. அவளது மனவேதனை சிறிதும் சகிக்க வொண்ணாததாகவும் அபாரமானதாகவும் பெருகிவிட்டது. அதற்கு மேல் தனக்குக் கடிதம் வராது என்ற உறுதியே மேலாடத்