பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பூர்ணசந்திரோதயம்-3 தொடங்கியது. தனது காதலருக்கு எதிர்பாராத ஏதோ தீங்கு நேர்ந்துவிட்டது என்பதும் நிச்சயமாகத் தோன்றியது. அவருக்கு எவ்விதமான கெடுதல் உண்டாகியிருக்குமோ என்று அவள் பலவாறு யூகித்து யூகித்துப் பார்க்கிறாள். எதையும் அவள் நிச்சயம் செய்யமாட்டாத நிலைமையில் இருந்துதணலின்மேல் வீழ்ந்த புழுவைப் போலத் துடிதுடித்துப் பரிதபிக்கலானாள். ஒரு நிமிஷம் கழிவது ஒரு கற்ப காலம்போலத் தோன்றியது. அவளது மனம் ஆகாரம் தூக்கம் முதலிய எவ்வித தேக செளக்கியத்தையும் நாடாமலே இருந்தமையால் தேகம் துரும்பாக மெலிய, முகம் கவலை கொண்டு வெளிறடைந்து போயிற்று. ஒருகால் அவரது உயிருக்கே ஏதேனும் ஹானி நேர்ந்திருக்குமோ என்ற நினைவே உரமாக எழுந்து அவளை அநவரதமும் சஞ்சலத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. அவள் தனது வேலைக்காரியைத் திருவாரூருக்கு அனுப்பிக் கலியான சுந்தரத்தின் வீட்டிலிருந்த அவனது வேலைக்காரி, சிவ பாக்கியம் முதலியோருக்கு ஏதாவது தகவல் கிடைத்ததோ என்பதைக் கேட்டறிந்துவரச் செய்தாள். ஒருமாத காலமாகக் கடிதம் வரவில்லை என்பதைக் கேட்டவுடனே அவர்களும் மிகுந்த கலக்கமும் கவலையும் அடைந்து, அங்கிருந்து, புறப்பட்டு ஷண்முகவடிவினது மாளிகைக்கு வந்து அவளுக்குப் பலவாறு தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். சிவபாக்கியம் தனது அக்காள்மார்கள் கலியாணசுந்தரத்தினிடம் நடந்து கொண்ட விருத்தாந்தங்களைக் கேட்டு அளவற்ற வெட்கமும் அவமானமும் அடைந்து நிரம்பவும் குன்றிப்போனதன்றி, தனது சகோதரிகள் எப்படிப்பட்ட இழிவான காரியத்திற்கும் பின் வாங்காத பரத்தையர்.ஆதலால், அவர்களே கலியாணசுந்தரத்தின் மனதை ஒருகால் கலைத்து, அவரது புத்தியை மாற்றி யிருப்பார்களோவென்று சந்தேகித்துத் தனது சம் சயத்தை ஒருவாறு வெளியிட்டாள். மகாபரிசுத்த குணமுடைய புண்ணிய வதியானஷண்முகவடிவு அதை ஒப்புக் கொள்ளவில்லை. தனது ஆருயிர்க் காதலர் பரம உத்தம புருஷர் என்பது தன் மனதிற்கு