பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 நிச்சயமாகத் தெரியும். ஆதலால், அவர் அந்தப் பெண்களினது மோக வலையில் ஒருநாளும் அகப்படக்கூடிய மனிதரே அல்ல என அவள் உறுதியாகக் கூறினாள். ஆனாலும், ஒருகால் அப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி அவளுக்கு மிஞ்சி, அவளது மனதில் தானாக எழுந்தெழுந்து மறைந்து கொண்டிருந்தது. ஆனாலும், அவள் தனது காதலரைப் பற்றி தான் அவ்வாறு சம்சயப்படுவது முற்றிலும் தவறு என்று அவள் அடிக்கடி தனது மனதைக் கண்டித்துக் கொண்டே வந்தாள். நிமிஷத்துக்கு நிமிஷம் அவளது வியாகுலம் பாம் பின் விஷம்போலப் பெருகி அவளை உருக்குலைத்துப் பாழாக்கிக் கொண்டே இருந்தது. உலகமெல்லாம் இருண்டு சந்தோஷமற்ற அந்தகாரத்தில் மூழ்கிப் போனதுபோலத் தோன்றியது. அந்த நிலைமையில் அவள் படுத்த படுக்கையாக வீழ்ந்து விட்டாள். சிவபாக்கியம் முதலியோர் அவளுக்குரிய பணி விடைகளைச் செய்து அவளைத் தேற்ற முயன்றதோடு அவளது அத்தைக்குச் செய்யவேண்டிய சகலமான உபசரணைகளையும் கவனித்து வந்தனர். அதற்குமேல் கடிதமும் வரப் போகிறதா என்று அவர்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த சந்தர்ப்பத்தில் ஒருநாள் காலையில் திடீரென்று தபால்காரன் உட்புறத்தில் வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனான். அவ்வாறு எதிர்பாரா வகையில் கடிதம் வந்ததைக் கண்ட பெண்டீர் அனைவரும் அதன் விஷயம் இன்னதென்பதை அறிய நிரம் பவும் ஆவல் கொண்டு துடித்து நின்றனர். அது காறும் படுக்கையை விட்டு எழுந்திருக்கமாட்டாமல் துவண்டு தளர்ந்து கிடந்த ஷண்முகவடிவு என்னும் மின்னற்கொடியாள் - சடக்கென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள். தண்ணிர்க் காணாப் பயிர்போல வாடி யிருந்த அவளது மனமும் பொங்கி எழுந்தது. முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அதற்குள் இருக்கும் செய்தி நல்லதாக இருக்குமோ கெட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக எழுந்து அவளது மனதை