பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பூர்ணசந்திரோதயம்-3 மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியது. அவள் கடிதத்தைப் பிரிப்பதற்குள் கைகள் வெடவெடவென்று நடுங்கின. மனம் எண்ணாததை எல்லாம் எண்ணியது. அந்த ஒரு விநாடி நேரமும் ஒரு யுகம்போலத் தோன்றியது. அவள் நிரம்பவும் பாடுபட்டுத் தன் மனதை ஒருமுகப்படுத்தி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். அந்தக் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: மெத்த அவசரம் ஷண்முகவடிவு அம்மாளுக்கு, நீ கலியாணம் செய்துகொள்ள எண்ணியிருந்த உன் ஆருயிர் நண்பரானகலியாணசுந்தரம் மகாஅபாயகரமானநிலைமையில் இருக்கிறார். இந்தக் கடிதத்தைக் கண்ட அதே கடினத்தில் நீ புறப்பட்டுக் கோலாப்பூருக்கு வந்து சேராவிட்டால், காரியம் முற்றிலும் விபரீதமாக முடிந்துவிடும். நீ இந்த ஊருக்கு வந்தவுடனே இங்கே உள்ள போலீஸ் கமிஷனரிடம் நேரில் போய் விசாரிப்பாயானால், கலியான சுந்தரத்தைப் பற்றிய உண்மையை எல்லாம் நீ உடனே தெரிந்து கொள்ளலாம். யாரோ எழுதினார்கள் என்று அசட்டையாக இருந்தால், அதன்பிறகு நீ உன் ஆயிசுகால பரியந்தம் மனவேதனைக்கு இரையாக நேரிடும். தாமதம் இன்னமும் அதிக பிரதிகூலத்தை உண்டாக்குவது நிச்சயம். இங்ங்னம், உன்னிடம் பட்சமுள்ள ஒருவர். என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்க, ஷண்முகவடிவும் மற்றவர்களும் அப்படியே கலகலத்து ஸ்தம்பித்துப் போயினர். சிறிதுநேரம் வரையில் யார் என்ன பேசுவது என்பதை அறியாமல் எல்லோரும் மெளனமாக இருந்தனர் என்றாலும், ஒரு விஷயம் நிச்சயமாகப் புலப்பட்டது.