பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237 அதுவரையில் கலியாணசுந்தரம் உயிரோடு இருக்கிறார் என்ற இரு விஷயம் நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும், அவருக்கு எவ்விதமான அபாயம் நேர்ந்ததோ, தான்போய் அவரைக் இாண்பதற்குள் என்னென்ன விபரீதங்கள் சம்பவிக்குமோ என்ற தோடாதுகோடி எண்ணங்கள் தோன்றின. அந்தக்கடிதம் யாரால் எழுதப்பட்டிருக்கும் என்ற சந்தேகமும் பலமாக எழுந்து வதைத்தது ஆகையால், அவ்விஷயத்தில் அவர்கள் எவ்வித மான முடிவையும் செய்யக் கூடாமல் இருந்தனர். அந்தக் கடிதம் ஏதாகிலும் கெட்ட எண்ணத்தோடு யாராவது பகைவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உண்டானது. ஆனாலும், அதற்கிணங்க ஒருமாத காலமாய்க் கலியாணசுந்தரத்தின் இடத்திலிருந்து கடிதமே வராதிருந்தது, அவருக்கு ஏதோ அவகேடு நேர்ந்திருக்கிறது என்பது இருவகையிலும் உண்மை யாகப்பட்டது. ஆகையால், தான் அவசியம் புறப்பட்டுப்போய் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் அந்தப் பூங்கோதையினது மனதில் உடனே ஏற்பட்டு விட்டது. ஆனாலும், அநாதரவான நிலைமையில் தனது அத்தையை விட்டுப் போவது பெருத்த பாவம் என்ற நினைவு குறுக்கிட்டு வதைத்தது. இருந்தாலும், அந்த அபாய சமயத்தைப் பொருட் படுத்தாமல் தான் சும்மா இருந்துவிட்டால் தன்னால் தனது காதலர் தப்பக் கூடியதாக இருந்தால், தனது உதவி இல்லாமல் போவதனால், அவருக்கு ஏதேனும் பெருத்த பொல்லாங்கு நேர்ந்துவிடுமோ என்ற கவலையே பெரிதாக எழுந்து வதைத்தது. ஆகையால், அவர்கள் நால்வரும் கலந்து வெகுநேரம்வரை யில் யோசனை செய்து கடைசியில் ஒருவித முடிவிற்கு வந்தனர். சிவபாக்கியமும், முத்தம்மாளும் ஊரிலிருந்து அத்தையம் மாளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருப்பது என்றும், ஷண்முகவடிவும் கலியாணசுந்தரத்தின் வேலைக்காரியும்