பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 அசெளகரியப்பட்டுப் போய்விட்டது. மெல்லிய சரீரத்தை உடையவளான ஷண்முக வடிவினது தேகம் பச்சைப் புண்ணாகப் போய் அப்படி இப்படி அசைவதற்கும் இயலாத நிலைமையை அடைந்து விட்டது. ஆனாலும், தனது ஆருயிர்க் காதலரது உண்மையான நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலினாலும், மனோவேகத்தினாலும் தூண்டப்பட்டவளாய்த் தனது அயர்வையும் அலுப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக இருந்தாள். ஆனால், அவளோடு கூடவந்த வேலைக்காரி அவ்வளவு அதிகமான மனோதிடத்தினாலும் கவலையினாலும் ஊக்கப்பட வில்லை. ஆகையால், அவளது நிலைமை அதிக கேவலமாக இருந்தது. உடம்பில் புண்பட்டுச் சோர்ந்து ஒய்ந்து பிரக்ஞை யில்லாமல் போய் விட்டமையால், அவள் தன்னையும் உலகையும் மறந்து படுத்த படுக்கையாக இருந்துவிட்டாள். ஷண்முகவடிவினது நிலைமை நிரம்பவும் பரிதாபகரமானதாக இருந்தது. அவ்வளவு பாடுபட்டு நெடுந்துாரம் பிரயாணம் செய்துஅங்கே வந்தபிறகு அலுத்துச்சும்மாயிருந்து காலஹரணம் செய்யாமல் எப்படியும் தான் உடனே போய்த் தனது காதலரது நிலைமையை அறிந்துகொள்வதே தக்க காரியமென்ற எண்ணம் அவளைத் துண்டியது. தான் யெளவனப் பருவ ஸ்திரீயா யிருப்பதுபற்றிப் போலீஸ் கமிஷனரிடம் வேலைக்காரியை அனுப்பி விஷயத்தைத் தெரிந்துகொண்டு போகலாமென்றால், அவள் ஸ் மரணையற்று அலங்கோலமான நிலைமையில் இருந்தாள். ஆகையால், அவள் அந்த விபரீதமானநிலைமையில் தான் எப்படி நடந்துகொள்வது என்பதை அறியாதவளாய்ச் சிறிது நேரம் தத்தளித் திருந்து அந்த வேலைக்காரிக்குரிய செளகரியங்களைச் செய்தபிறகு தானே நேரில்போய் போலீஸ் கமிஷனரை அவரது கச்சேரியில் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சத்திரத்திலிருந்து புறப்பட்ட சமயத்தில், அவள் இருந்த இடத்திற்கு ஒரு ஸ்திரீ வந்து புன்னகை தவழ்ந்த இனிய முகத்தோடு இனிமையாகப் பேசத் தொடங்கி, 'அம்மா! g-É.iii-16