பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24O - பூர்ணசந்திரோதயம்-3 நீதிருவாரூரிலிருந்து வருகிறாயா? உன் பெயர் ஷண்முக வடிவு அல்லவா? என்றாள். அப்படி வந்து சம்பாஷித்த ஸ்திரீயினது வயது நாற்பதிற்குள் ளாகவே இருக்கலாம். ஆனால், அவள் சிவப்பான செழித்த உடம்பும், அழகும், கம்பீரமும், பெருந்தன்மையும் நிறைந்த தோற்றமும், உயர்வான நவரத்ன ஆபரணங்களும் பட்டாடை களும் உடையவளாகக் காணப்பட்டாள். அவள் தக்க பெரிய மனிதரது வீட்டைச் சேர்ந்த ஒரு சீமாட்டி என்பது எளிதில் விளங்கியது. அன்னிய தேசமான அந்த தூரதேசத்தில் தனக்கு அறிமுகமான மனிதர் ஒருவர்கூட இல்லாத அந்தப்பெரிய பட்டணத்தில் எவரது உதவியும் அன்றி, தான் கோரிவந்த காரியத்தை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற பெருத்த பீதியும் கவலையும் கொண்டு நிரம்பவும் மலைப்படைந்து, எந்தக்காரியத்தையும் செய்யத் தயங்கியிருந்த அபலைப் பெண்ணான நமது ஷண்முகவடிவு கும்பிடப்போன தெய்வம் குறுக் கிட்டதுபோல நல்ல சமயத்தில் யாரோ ஒரு ஸ்திரீ திடீரென்று தோன்றித் தனது ஊரையும் பெயரையும் வெளியிட்டுத் தன்னோடு அத்யந்தப் பிரியத்தோடு பேசியதைக் கண்டு அளவற்ற மனோதிடமும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்தவள். ஆனாள். அதுவுமன்றி அந்த ஊரிலிருந்து தனக்குக் கடிதம் எழுதியனுப்பிய மனிதரைத் தான் எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவள் நிரம்பவும் கவலையுற்றிருந்தாள். ஆதலால், அந்த ஸ்திரீ சொன்ன வார்த்தைகளிலிருந்து, அவளே தனக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்ற ஓர் எண்ணமும் உண்டாயிற்று. ஆகவே, நமது இளந்தோகையான ஷண்முகவடிவு அந்த ஸ்திரீயை மரியாதையோடு உபசரித்து விநயமாகப் பேசத் தொடங்கி, 'ஆம் அம்மா! நான் திருவாரூரிலிருந்து தான் வருகிறேன். என் பெயரும் ஷண்முகவடிவுதான். நீங்கள் யார் என்பது தெரியவில்லை. என்னுடைய பெயர் முதலிய