பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 241 விவரங்களை நீங்கள் சொல்வதையும் நீங்கள் இப்போது என்னைப் பார்க்க வந்திருப்பதையும் கவனித்தால், எனக்குக் கடிதம் எழுதியனுப்பியவர்கள் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்" என்றாள். அந்த ஸ்திரீ ஒரு தாய் தனது சொந்த மகளிடத்தில் எவ்வளவு உருக்கமும் பாசமும் காண்பிப்பாளோ, அவ்வாறு ஷண்முக வடிவினிடத்தில் நடந்துகொண்டு, 'ஆம்; அம்மா! நான்தான் அந்தக்கடிதத்தை உனக்கு அனுப்பி வைத்தேன். அதை அசட்டை செய்து சும்மா இருந்துவிடாமல் நல்ல வேளையாக நீ உடனே புறப்பட்டு வந்தாயே! அதைப் பற்றி நான் நிரம்பவும் சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சொந்த ஊரும்" தஞ்சாவூர்தான். இந்த ஊர்ப் போலீஸ் கமிஷனர் என்னுடைய நெருங்கிய பந்து. நான் அவருடைய வீட்டில் விருந்தாளியாக வந்திருக்கிறேன். நான்தஞ்சாவூரிலிருந்து இங்கே வந்து இரண்டு மாச காலமாகிறது. சில தினங்களுக்கு முன் ஒருநாள் ராத்திரி போலீஸ் கமிஷனர் போஜனம் செய்துவிட்டு வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த காலத்தில் இந்தக் கலியாணசுந்தரத்தைப் பற்றிய வரலாறுகளை யெல்லாம் வெளியிட்டார். அப்போது உன்னைப் பற்றிய பிரஸ்தாபமும் வந்தது. போலீஸ் கமிஷனர் உள்பட நாங்கள் எல்லோரும் உன்னைப் பற்றித்தான் நிரம் பவும் விசனப் பட்டோம். நான் தஞ்சாவூர் மனிஷியாகையாலும், நீங்களும் அதே சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் ஆகையால், மற்றவர்களைவிட எனக்கே உன் விஷயத்தில் நிரம்பவும் பரிதாபம் ஏற்பட்டு மனசைப் புண்படுத்தியது. நீயோ அநாதையான பெண். இந்த மனிதரை நீ கடைசி வரையில் நம்பியிருந்து மோசம் போய்விடப் போகிறாயே என்ற நினைவைக் கொண்டு நான் உனக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். நல்லவேளையாக நீ நேரில் வந்துவிட்டாய்; விஷயங்களை எல்லாம் நீ நேரிலேயே அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துகொள் என்றாள்.