பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 சமயத்தில் உங்களுடைய கடிதம் வந்தது. அதைக் கண்டு பயந்து உடனே புறப்பட்டு வந்தேன். இங்கே நடந்த வரலாறு ஒன்றும் எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சொல்லுங்கள். அவர் இப்போது எங்கே இருக்கிறார்?' என்று நிரம்பவும் ஆவலோடு வினவினாள். அதைக்கேட்ட அந்த ஸ்திரீ, 'அவர் இந்த ஒரு மாசகாலமாக இந்த ஊர்ச் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கிறார்” என்று வியப்போடு மறுமொழி கூறினாள். அதைக்கேட்ட ஷண்முகவடிவு கலங்கிக்கலகலத்துப்போய், "ஹா என்ன என்ன சிறைச்சாலையில் இருக்கிறாரா என்ன ஆச்சரியம்! அவர் அற்பமான தவறையும் செய்யாத மகா உத்தமகுணமுடைய புருஷரல்லவா? அவர் எதற்காகச்சிறையில் இருக்கிறார்?' என்று துடிதுடித்து விரைவாகக் கேட்டாள். அந்த ஸ்திரீநிரம்பவும் இரக்கமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி, 'அம்மா அந்த மனிதரை நான் நேரில் பார்த்தவ ளல்ல. அவர் எந்தக் குற்றம் செய்ததையும் நான் நேரில் பார்த்தவ ளல்ல. போலீஸ் கமிஷனர் பெரிய உத்தியோகஸ்தர். அவரு டைய பார்வையில் எத்தனையோ கைதிகள் இருக்கிறார்கள். எல்லோரும் கீழ் அதிகாரிகளால் கைதுசெய்து அனுப்பப் பட்டவர்களே. அவர்கள் அனுப்பும் அறிக்கைகளைக் கொண்டே எல்லா வரலாறுகளையும் போலீஸ் கமிஷனர் அறிந்து கொள்ள வேண்டியவர். போலீஸ் கமிஷனர் நேரில் எதிலும் தலையிடுகிறதும் இல்லை; யாரையும் கைது செய்கிறதும் இல்லை. வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற காரணத்தினால், அவர் எவருக்கும் நன்மையோ தீமையோ செய்யக்கூடியவரல்ல. தங்களுடைய சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளுடைய வரலாற்றில் ஏதாவது வேடிக்கையாக இருந்தால், அவர் அதைத் தம்முடைய வீட்டுப் பெண்பிள்ளைகளிடம் விளையாட்டாக வெளியிடுவார். அதுபோலவே அவர் இந்த விஷயத்தையும் பிரஸ்தாபித்தவர்