பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 245 ஆந்த ஸ்திரீ, 'அந்த மனிதர் உன்னிடத்தில் நிரம் பவும் - அந்தரங்கமாகப் பழகி இருக்கிறார்என்பது தெரிகிறது. நீஅவரை உயிருக்குயிராக மதிக்கிறாய் என்பதும் பிரத்தியrமாகத் தெரிகிறது. அப்படியிருந்தும் அவர் தம்முடைய உண்மைப் பெயரை உன்னிடத்திலேயே சொல்லாமல் இதுவரையில் மறைத்து வைத்திருக்கிறார் என்கிறாயே. இப்படி வேறே யாராவது உலகத்தில் செய்வதுண்டோ? உன்னை அவர் கட்டிக் கொள்ளுகிறது என்று நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உன்னிடத்திலேயே அவர் தமது உண்மையான பெயரைச் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறாரே. அதில் ஏதோ சூது இருக்கிறது என்பது தெரியவில்லையா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம். இந்த விஷயத்தைக் கொண்டே, அவர் இன்னமும் அநேக சூதான காரியங்களைச் செய்யத் தக்கவர் என்பது தெரியவில்லையா? அவர் தம்முடைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டதை ஒரு பெரிய குற்றமாக மதித்து அதற்காக மாத்திரம் இவர்கள் அவரைச் சிறைப்படுத்த வில்லை. அவர் செய்துள்ள இன்னும் மற்ற அக்கிரமங்களையும் இழிவான காரியங்களையும் நீ கேட்டால், இவர் பெயரை மாற்றி வைத்துக் கொண்டது நிரம் பவும் அற்பமான விஷயமாகத் தோன்றும். அவர் இந்த ஊருக்கு வரும்போது யாரோ சிலதாதிப் பெண்களோடு சேர்ந்து வந்தாராம்; அந்தத் தாதிப் பெண்கள் தஞ்சாவூர் அரண்மனையிலிருந்து புறப்பட்டு பூனா தேசத்திலுள்ள தஞ்சாவூர் இளவரசருடைய பட்டமகிஷியிடம் வேலைக்குப் போகிறவர்களாம். அந்த மூன்று பெண்களும் மகா அற்புதமான அழகும் யெளவனப் பருவமும் வாய்ந்தவர்களாம். அவர் அவர்களை செஞ்சிக் கோட்டையில் கண்டாராம். கண்டவர் அந்த ஊரிலுள்ள சத்திரத்து மணியக்காரர் மூலமாகப் பலவகையில் தந்திரம் செய்து அந்தப்பெண்களோடு பழக்கம் செய்துகொண்டு அவர்களுக்குத் துணை வருகிற பாவனையாக அவர்களோடு ஒரேவண்டியில் வந்தாராம். அவர் அவர்கள்மேல்