பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 21 சொல்லி, அவளுடைய யோசனைப்படி நடந்துகொள்ளுவ தாகவும், அவளுடைய மறுமொழி வருகிற வரையில் இந்த ஊரிலேயே இருப்பதாகவும் எழுது. அதற்குள் நான்போய் இந்தச்சத்திரத்தின் மணியக்காரரைக் கண்டு உடனே தஞ்சைக்கு ஒரு கடிதம் எடுத்துப்போக ஒர் ஆள் வேண்டுமென்றும், அவன் குதிரை மேல் சவாரி செய்து கொண்டு அதிசீக்கிரமாகப் போய் வரவேண்டுமென்றும் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்து கொண்டு வருகிறேன்' என்றாள். - அம்மாளு:- நாம் தஞ்சைக்கு ஆளை அனுப்புகிறோம் என்று இந்த மனிதருக்குத் தெரிவதைக் காட்டிலும் தெரியாமல் இருப்பது நல்லதென்று நினைக்கிறேன். முத்துலகஷ் மியம்மாள்:- நாம் ஆளை அனுப்புவது இவருக்குத் தெரியாமல் இருக்கும்படி நான் ஏற்பாடு செய்கிறேன். நீஅதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நான் போய்விட்டு வருவதற்குள் நீ சீக்கிரமாகக் கடிதத்தை மாத்திரம் எழுதிவை என்று கூறிவிட்டு வெளியில் போய் விட்டாள். அவ்வாறு அவள் வெளியில் போனவுடனே தனம் என்பவள் தனது அக்காளை நோக்கி, 'அப்படியானால் உன்னுடைய சாமர்த்தியம் எல்லாம் இவரிடம் பலிக்காமலா போய்விட்டது! இவ்வளவுதானா?” என்றாள். அதைக்கேட்ட அம்மாளு மிகுந்த விசனமும் ஏமாற்றமும் தோற்றுவித்த முகத்தினராய், "அவருடைய மனம் கல்லினாலே தான் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இவ்வளவு பாலியப்பருவத்தில் இவர் இவ்வளவு அசாத்திய மான மனவுறுதியோடு இருப்பது மகா அருமையான காரியம். ஆனால், இவர் நம்மையெல்லாம் காதலிக்காவிட்டாலும், வேறே யாரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறாராம்; அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னார். நாம்