பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பூர்ணசந்திரோதயம்-3 விசாரணையில் அவருக்காகப் பரிந்து பேச வக்கீல் வைத்து எதிர்வாதம் முதலிய சகலமான நடிவடிக்கைகளையும் நடத்த அவருடைய மனிதர் யாராவது இருக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் நான் முக்கியமாக உனக்குக் கடிதம் எழுதி உன்னை வரவழைத்தது. அதுவும் அல்லாமல், நீபோய்ச்சிறைச் சாலையிலிருக்கும் இவரைக் கண்டு இவருக்கு நல்ல புத்திமதி சொல்லி, இவருடைய பைத்தியத்தை மாற்றி இந்த விசாரணை முடிந்தவுடனே உன்னோடு ஊருக்கு வந்துவிட இவர் இணங்கும்படி நீ செய்வதாக இருந்தால், போலீஸ் கமிஷனர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து சாட்சிகளைக் கலைத்து இந்த வழக்கில் சரியான ருஜு ஏற்படாமல் செய்துவிடுவதாகச் சொல்லுகிறார். நான் உனக்குக் கடிதம் எழுதியிருக்கும் சங்கதி கமிஷனருக்குத் தெரியும். ஆனால், நீ இவ்வளவு தூரம் வருவோயோ மாட்டாயோ என்று நாங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்ததன்றி, இந்த ஊரிலுள்ள சத்திரங்களில் எல்லாம் சொல்லி வைத்திருந்தோம். திருவாரூரிலிருந்து யாராவது மனிதர் வந்தால், உடனே வந்து எங்களுக்குத் தகவல் கொடுக்கும் படி ஒவ்வொரு சத்திரத்திலும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். நேற்று இரவில் நீங்கள் இங்கே வந்து இறங்கியிருப்பதாக இந்தச் சத்திரத்து மணியக்காரர் வந்து சொன்னார். இவ்வளவு தூரம் வந்த அலுப்பினால் நீங்கள் சிரம பரிகாரஞ் செய்து கொள்வது அவசியம் என்று நினைத்து நான் நேற்று இரவில் வரவில்லை. இருந்தாலும், இந்த ஊர் உனக்குப் புது ஊர் ஆகையால், நீ அறியாத சின்னப் பெண் ஆகையால், நீ ஒன்றையும் அறிந்துகொள்ள மாட்டாமல் கஷ்டப்படுவாயே என்கிற எண்ணத்தினால், நான் பொழுது விடிந்தவுடனே புறப்பட்டு இங்க வந்து சேர்நதேன்' என்று நிரம் பவும் பரிதாபகரமாகவும் இளக்கமாகவும் கூறினாள். அந்த மகா விபரீதமான வரலாற்றைக் கேட்ட ஷண்முக வடிவினது மன நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை