பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 உள்ளபடி எடுத்துச் சொல்வது முற்றிலும் அசாத்தியமான காரியம். திடீரென்று பெருத்த உலக்கையைக் கொண்டு ஒரு மனிதரது சிரசின் மீது ஓங்கி அடித்தால், அப்படி அடிப்பட்டவருக்கு எப்படிப் பொறி கலங்கி மூளை குழம்பி அறிவு இருளடையுமோ, அதுபோலவே, ஷண்முகவடிவு என்னும் நமது மடமயிலாள் முற்றிலும் ஸ் மரணை தப்பி அப்படியே ஸ்தம் பித்து மயங்கிப் பக்கத்திலிருந்த சுவரில் சாய்ந்து இரண்டொரு நிமிஷ நேரம் பிரமித்து மெளனமாக நின்று விட்டாள். தன்னிடத்தில் பழகிய வரையில் மகா சிரேஷ்ட குணமுடைய உத்தம புருஷர் போலக் காணப்பட்ட தனது ஆருயிர்க்காதலர் அப்படியும் மாறிப் போயிருப்பாரோ என்ற சந்தேகமும் வியப்புமே அபாரமாக எழுந்து, நிரம்பவும் உரமாக அவளது மனதை அழுத்திவிட்டன. தாயைக் காட்டிலும் பன்மடங்கு அதிக வாத்சல் யத் தோடும் உருக்கத்தோடும் அந்தரங்க அபிமானத் தோடும் அந்த ஸ்திரீ தன்னிடத்தில் விஷயங்களைச் சொல்லி நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, அந்த அம்மாள் சொல்வதைப் பொய்யென்று சந்தேகிக்கவும் இடமில்லாமல் இருந்தது. அதுவுமன்றி, கலியாணசுந்தரம் தனக்கு எழுதிய கடிதங்களும் அந்த அம்மாள் சொன்ன வரலாறுகளும் முற்றிலும் பொருத்தமாகவே இருந்தன. அவர்கள்கட்டுப்பாடாக அத்தனைவிஷயங்களையும் கற்பித்துத் தன்னிடம் கூறவும் அவ்வளவு தூரத்திலுள்ள தன்னை வரவழைக்கவும் வேறு எந்த முகாந்திரமும் இருக்க நியாய மில்லை என்பதும் எளிதில் பட்டது. இருந்தாலும், மகா நற்குணவானானகலியாணசுந்தரம் அப்படிப்பட்டதுர்மார்க்கங் களில் இறங்கி இருக்கமாட்டார் என்ற உறுதியும் ஒரு பக்கத்திலிருந்துவதைத்தது. எவ்வித ருஜுவும் இல்லாமல் அவர் மீது கெட்ட அபிப்பிராயம் கொள்வது சரியல்ல என்றும் அவளது மனசாட்சி இடித்திடித்து மனதை வதைத்தது. உண்மையிலேயே கலியாணசுந்தரம் அப்படிப்பட்ட துர் நடத்தையில் இறங்கிக் கெட்டுப்போயிருந்தால், அவரைத்தான்.அதற்குமேல் மணப்பது