பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 251 சரியல்ல. எல்லாவற்றிற்கும் நீ உடனே என்னோடு கூடவே எங்களுடைய வீட்டுக்கு வா வந்து அங்கே இருக்கும் போலீஸ் தமிஷனர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேள். அவர் எழுத்து மூலமான ஆதாரத்தோடு எல்லா விஷயங்களையும் திருப்திகரமாக உனக்கு மெய்ப்பிப்பார். அதற்குமேல், அவர் சொல்லும் புத்திமதிப்படி நீ நடந்து கொள்ளலாம்' என்றாள். அதைக்கேட்ட ஷண்முகவடிவு இன்னமறுமொழி சொல்வது என்பதையும், என்ன விதமாக நடந்து கொள்வது என்பதையும் அறியாதவளாய்க் கலக்கமும் குழப்பமும் நிரம்பிய மனத்தி னளாய்ச் சிறிது நேரம் நின்ற பின், சரி; இவ்வளவு தூரம் வந்து விட்டேன். வந்தபின் உண்மையைத் தெரிந்துகொள்ளப் பின் வாங்குவதில் என்ன உபயோகம் ? நான் உங்களோடு கூட வருகிறேன். போலீஸ் கமிஷனர் என்ன சொல்லுகிறார் என்பதையும் கேட்டுப் பார்த்துவிடலாம். ஆனால் என்னுடன் வந்திருக்கும் வேலைக்காரியையும் என்னோடு கூட அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்பது என்னுடைய விருப்பம். இருந்தாலும், அவள் கடுமையாக நோய் கொண்டு படுத்திருப்பதால், அவள் செளக்கியமடைந்த பிறகு வருவது என்றால், நாலைந்து தினங்கள் கழிந்துபோகும். ஆகையால் நான் மாத்திரம் தனியாகத்தான் வரவேண்டும். என்ன செய்கிறது, நான் ஜென்மம் எடுத்த வேளை அப்படிப்பட்டது . ஆண்பிள்ளை களான உற்றார் உறவினர் எவரையும் நான் படைக்கவில்லை' என்று நிரம்பவும் பரிதாபகரமாக மறுமொழி கூறினாள். அந்த ஸ்திரீ, “மெய்தான். உனக்கு மேலான ஆண்பிள்ளைகள் இருந்தால், அவர்கள் இவ்வளவு தூரம் உன்னைத் தனியாக அனுப்பியிருக்க மாட்டார்கள்தான். அதுவுமன்றி, இந்த மனிதருடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் அப்போதே கண்டுபிடித்து, உன்னிடம் இவர் வந்து அதிகமாக நெருங்காமலும் செய்திருப்பார்கள். உலகத்தில் பெண் பிள்ளைகள் தனியாக இருந்தால், அவர்களை