பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பூர்ணசந்திரோதயம்-3 ஸ்திரீகளில் சிலரைக்கெடுக்க யத்தனித்துப் பலவகையில் அவர்களுடைய மனசை மயக்கிப் புத்தியைக் கலைக்கு முயற்சித்தார். அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் இவருடைய நடவடிக்கைகளை எல்லாம் முன்னிலும் அதிக விழிப்பாகத் கவனிக்கத் தொடங்கியதன்றி, ஒரு ஜவானை தஞ்சாவூர், திருவாரூர் முதலிய இடங்களுக்கு அனுப்பி, இவருடைய வரலாற்றையும் இவர் உன்னோடு பழக்கமாக இருந்த சங்கதிகளையும் உன்னுடைய குடும்ப வரலாறுகளையும் விசாரித்து அறிந்துவரச்செய்தார். அப்போதுதான் இவர் தம்முடைய சொந்தப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால், இவருடைய சொந்தப் பெயர் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நீ ஒருவேளை ஆசைப்படலாம்; அதை மாத்திரம் நான் இப்போது வெளியிடுவது சரியல்ல. நீ நேரில் போய்ப் பார்க்கும்போது, அவரிடத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள். அதுதான் நல்லது. இப்போதாவது இவர் உண்மையை உன்னிடத்தில் வெளியிடுகிறாரா என்பது தெரிந்து போகும். மற்ற விவரங்களை எல்லாம் நான் இதோ இருக்கும் பிரதியிலிருந்து உனக்குப் படித்துக் காட்டுகிறேன். நான் வாயால் சொல்வதைவிட எழுத்து மூலமான ருஜூவினால் நீ தெரிந்து கொண்டால்தான், உன் மனசுக்கு நம்பிக்கைப்படும் என்று கூறியவண்ணம், தமக்கு எதிரில் மேஜையின்மீது கிடந்த ஒரு பெரிய பிராதை எடுத்துக் காட்டினார். அந்தப் பிராதில் சொல்லப்பட்டிருந்த விவரங்களும், அதற்குமுன் அந்த ஸ்திரீ சொன்ன விவரங்களும் ஒன்றாகவே இருந்ததைக் கண்ட ஷண்முகவடிவு சகிக்கக் கூடாத துயரமும் சங்கடமும் அடைந்தவளாய்த் தனது கைகளைப் பிசைந்துகொண்டு பரிதவித்தவண்ணம், "ஐயோ தெய்வமே! என்ன செயவேன்! இது என்ன விபரீதமோ தெரியவில்லையே! அங்கே இருந்தவரையில் பரம யோக்கியராக இருந்த மனிதர் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தார் என்றால், என் மனம் நம்பவே மாட்டேன் என்கிறது. இப்போது சிறையில்