பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257 மனம் இங்கே வந்தபிறகு மாறிப்போயிருக்கலாம். அந்தப் பெண்கள் போனபிறகு அவர் தம்முடைய புது மோகத்தில் தலைகால் தெரியாமல் கெட்டலைந்து பலவிதமான துஷ்கிருத்தியங்களைச் செய்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் நீ அவரை நேரில் கண்டு அவருக்குப் புத்திமதி சொல்லிப்பார். அந்த விசாரணை இன்னம் இரண்டு தினங்களில் நடக்கப்போகிறது. அந்த விசாரணை முடிந்தவுடனே அவர் விடுதலை அடையும்படி நான் என்னாலான உதவிகளையும் முயற்சிகளையும் செய்கிறேன். விடுதலை அடைந்தவுடன் அவர் உன்னோடு கூடவே ஊருக்குத் திரும்பிவந்து பழையபடி யோக்கியராக நடந்துகொள்ள ஒப்புக்கொண்டால்தான் நான் அவருக்கு உதவி செய்வேன். இந்த ஊரிலேயே இருந்து, இன்னமும் பழைய வழியிலேயே போக அவர் ஆசைப்படுவா ரானால், நான் எவ்வித உதவியும் செய்யமுடியாது. ஆனால், இதில் ஒரு சந்தேகம். அவர் இந்த ஊருக்கு வருவதற்குமுன் நாணயமான மனிதராக இருந்திருந்தால், அவ்விடத்தில் தம்முடைய பெயரை மாற்றி வைத்துக் கொள்ள எவ்வித முகாந்திரமும் இல்லை. அப்படி மாற்றி வைத்துக்கொண்டு இருப்பதில்தான் ஏதோ சூதிருக்கிறது. அதையும் நீயே நேரில் அவரிடம் கேட்டுவிடு. இவ்வளவுதான் இப்போது உனக்கு நான் சொல்லவேண்டிய சங்கதி. நான் உனக்குச் செய்தி அனுப்பும்போது நீ வந்து சேர். நீ சிறு பெண்ணாக இருப்பதைக் கருதி, உன்னை எங்களுடைய ஜாகையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுடைய மனதில் உண்டாகிறது. ஆனாலும், அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்பது எவருக்கும் தெரியக்கூடாது. ஆகையால், நீ சம்பந்தமற்றவள்போல தூரத்தில் இருப்பதே நல்லது. ஆகையால், நீ சத்திரத்திலேயே இரு. நான் அதற்குத் தகுந்த மனிதர்களைக் கொண்டு உங்களுக்கு வேண்டிய சகலமான செளகரியங்களையும் செய்து கொடுப்பதோடு, உங்களுக்கு எவ்விதமான துன்பமும் நேராமல் பார்த்துக்கொள்ள ஏற்பாடு.