பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பூர்ணசந்திரோதயம்-3 எப்பாடு பட்டாலும் இவருடைய மனசைத் திருப்ப முடியாது என்பது எனக்கு நிச்சயமாக விளங்கிவிட்டது. இவர் நம்முடைய இஷ்டத்துக்கு இணங்கி வராவிட்டாலும், இவர் நம்மோடு கூட இருப்பதே ஒருவித ஆனந்தத்தை உண்டாக்குகிறது. ஆகையால், நாம் இவரோடு சண்டை போடாமல் கடைசிவரையில் இவரை நம்மோடு கூடவே அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்றாள். - அதைக் கேட்ட தனத்தின் மனம் அப்போதும் மோக ஆவேசம் கொண்டு தவித்தது. உடம்பு கட்டிலடங்காமல் துடிதுடித்தது. அவள் தனது அக்காளை நோக்கி, ‘அம்மாளு! இந்தக் காரியத்தை முடிக்க உன்னால் கூடாமல் போய்விட்டது அல்லவா? இப்போது முதல் நான் முயற்சி செய்து அவருடைய மனசை ஒருநொடியில் மாற்றி அவர் நம்மிடத்திலேயே சரணாகதியாகக் கிடக்கும் படி செய்து விடுகிறேன். அதன் பிறகு வசிய மருந்து போட்டு இவரை மயக்குவதே கடைசியான தந்திரம்' என்றாள். அதைக் கேட்டும் அம்மாளுவினது மனதில் சிறிதும் நம்பிக்கை பிறக்கவில்லை. அவள் உடனே எழுந்து ஒரு காகிதத்தை எடுத்துத் தனது தாய்க்குக் கடிதம் எழுதத் துவங்கி சுமார் ஒரு நாழிகை சாவகாசத்தில் அதை முடித்தாள். அதன்பிறகு சிறிது நேரத்தில் முத்துலகஷ் மியம்மாள் ஒரு தூதுவனை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். அந்தத்துதுவன் உடனே புறப்பட ஆயத்தமாய், குதிரை சவாரிக்குரிய உடைகளை அணிந்து வந்தான். அவனிடம் கடிதம் கொடுக்கப்படவே அவன் செலவு பெற்றுக்கொண்டு உடனே வெளியில் போய்விட்டான். அதன்பிறகு அன்றைய இராப் போஜனம் செய்து கொள்வதற்காக எல்லோரும் விடுதியை விட்டு வெளிப்பட்ட சமயத்தில் கலியாணசுந்தரம் வழக்கம் போல அவர்களோடு கலந்துகொண்டான். முத்துலகஷ்மியும் சகோதரிமார் மூவரும் அதற்குமுன் இருந்ததுபோல, அவ்வளவு கலகலப்பாகவும்