பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 காப்பாற்ற ஏற்றுக்கொண்ட தயாள புருஷரும், தனம் அம்மாளு முதலிய கூத்தாடிப்பெண்கள் பூனாவிலிருந்து இராஜமகிஷிக்குத் தீங்கிழைக்க செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற பரம தயாளமான எண்ணம் கொண்டு, தமது கலியாணத்தையும் ஒத்தி வைத்துவிட்டு எண்ணிறந்த ஆபத்துகளுக்கும்துன்பங்களுக்கும் இலக்காகி தூரதேசத்துக்குப் புறப்பட்டு வந்த காருண்ய வள்ளலும், தனது உயிருக்குயிரான காதலருமான அந்த மனோகர புருஷர் அவ்வாறு மாறிப்போய் இழிவான நடத்தைகளில் இறங்கி இருக்கமாட்டார் என்ற உறுதி அவளது மனதில் எழுந்து எழுந்து மும்முரமாகப் போராடியது. ஆனாலும், உண்மையில் அவர் சின்றப்பட்டிருப்பதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கமிஷனருக்குப் பிராது அனுப்பிக் கொண்டிருந்ததும் பிரத்தியr பூர்வமாகத் தெரிந்தன. ஆகையால், அவைக ளெல்லாம் கட்டுப்பாடாக இருக்கலா மென்று எளிதில் விலக்கிவிடக் கூடியனவாகவும் தோன்றவில்லை. அந்தத்தாதிப் பெண்கள் பூனாவிலுள்ள பட்ட மகிஷியின் விஷயத்தில் தீங்கு இழைக்கப் போவதற்கு இவர் இடையூறாக நிற்கிறார் என்பதைக் கருதி, அவர்கள் ஏதாவது சூழ்ச்சி செய்து போலீஸ் இன்ஸ் பெக்டரையும் கமிஷனரையும் கைவசப்படுத்திக் கொண்டு இவரைச் சிறைப்படுத்தித் தன்னை வரவழைத்து, அவர் மேன்மேலும் பூனாவுக்குப் போகாமல் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று. தன்னோடு நன்றாகப் பழகிய யோக்கியமான மனிதர் அயோக்கியமாக இருப்பாரோ என்று சந்தேகிப்பதைவிட, தனக்கு அதிகமாகப் பழக்கமில்லாத புதிய மனிதர்கள் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிப்பதே மனித இயற்கை ஆகையால், அவளது மனதும் அப்படிப்பட்ட சந்தேகத்தைக் கொண்டது. இருந்தாலும் தனது காதலர் ஊரிலிருந்தபோதே தமது பெயரை மாற்றிவைத்துக் கொண்டிருந்தார் என்பதும் அதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதுமே அவளுக்குச் சிறிதும் விளங்காத