பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O பூர்ணசந்திரோதயம்-3 அதிசயமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் தான் நேரில் போய்த் தனது காதலரைக் கண்டு பேசியே எதையும் உண்மையென்று நிச்சயிப்பது உசிதம் என அவள் தீர்மானித்துக் கொண்டவளாய்த் தான் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ என்று சகிக்கமாட்டாத ஆவல் கொண்டு வேதனைக் கடலில் ஆழ்ந்து வெதும்பிச் சோர்ந்து கிடந்தாள். அவளது மனம் ஸ்நானத்திலாவது ஆகாரத்திலாவது நித்திரையிலாவது செல்லாமல் துன்பமயமாக நிறைந்திருந்தது. ஆனால், அவள் அடிக்கடி தனது வேலைக்காரியண்டை போய் அவளுக்குரிய உபசரணைகளைச் செய்து அவளது தேக நிலைமையை விசாரித்து வந்ததன்றி இடையிடையில் தனது சொந்தத் துயரத்திற்கு இரையாகி சஞ்சலவாரிதியில் ஆழ்ந்திருந்தாள். அவ்வாறு அன்றைய பகற்பொழுது கழிந்தது. இரவும் வந்தது. போலீஸ் கமிஷனரது வீட்டிலிருந்து அந்த ஸ்திரீ வருவாள் வருவாள் என்று வழி பார்த்துப் பார்த்து நமது உத்தம குண சுந்தராங்கியின் விழிகள் பூத்துப் போயின. மனம் புண்பட்டது. அதற்கு மேல் அந்த அம்மாள் மறுநாள்தான் வருவாள் என்ற நிச்சயம் தோன்றியது. ஊரிலிருந்து வந்த களைப்போடு, சகிக்க முடியாத மனவேதனைகளும், அன்றைய காலை முதல் போஜனம் செய்யாததால் உண்டான சோர்வும் ஒன்றுகூடி அந்த மடமயிலைப் பரமவேதனைக்கு ஆளாக்கின ஆகையால், வேலைக்காரியின் தூண்டுதலின் மேல் அவள் சொற்பமாக ஆகாரத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு பக்கமாகப் படுத்தாள். படுத்தவள் வெகுநேரம் வரையில் மனம் ஆழ்கி அல்லற்பட்டிருந்து முடிவில் கடுமையானதுயிலில் ஆழ்ந்தாள். இரவு சுமார் இரண்டு மணி சமயம் இருக்கலாம். யாரோ தன்னை அவசரமாக எழுப்புவதாக ஷண்முகவடிவு உணர்ந்தாள். ஆனாலும் அவளது அங்கங்களெல்லாம் முற்றிலும் தளர்ந்து உணர்ச்சியும் ஊக்கமும் கொள்ளச் சிறிதும் சக்தியற்று இருந்தமையால், அவள் உடனே விழித்துக் கொள்ளக்