பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265 அந்த வரலாற்றைக் கேட்ட ஷண்முகவடிவினது 1 i) Ģğf நிலைமை மரண தண்டனை அடைந்தவன் தூக்குமேடையின் மேல் ஏறி நிற்கையில், அவனது மனம் எப்படிப் பரிதவிக்குமோ அப்படி இருந்தது. அதற்கு முன் அவர்கள் சொன்னதெல்லாம் கட்டுப்பாடாக இருக்கும் என்றும், கலியாணசுந்தரம் எவ்விதத் தவறும் செய்திருக்க மாட்டார் என்றும் அவள் உறுதியாக நினைத்திருந்தாள். ஆனாலும், இப்போது அவர் பக்கத்து அறையில் அடைபட்டிருக்கும் தாசிப் பெண்ணின் விஷயத்தில் எப்படியோ சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதைத் தான் நேரில் பார்க்கலாம் என்றும் அவர்கள் சொன்னதை அவள் கட்டுப் பாடென்று நினைத்து அசட்டை செய்யக் கூடாமல் இருந்தது. தனது ஆருயிர்க் காதலரான கலியாணசுந்தரம் ஆட்சேபகரமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பதைத் தான்.தனது கண்ணால் பார்ப்பதைவிடப் பார்க்காமல் இருப்பதே உசிதமாகத் தோன்றியது. தன்னைத் திருப்பி அழைத்துக்கொண்டு போய் சத்திரத்தில் விட்டுவிடச் சொல்லலாமா என்ற எண்ணம் அவளது மனதில் தோன்றியது. ஆனாலும், அவ்வளவு தூரம் வந்தபிறகு உண்மை இன்னதுதான் என்பதை நிச்சயமாக அறிந்து கொண்டு தன் மனதை ஒருவாறு திடப்படுத்தி ஒரு நிலைக்குக் - கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஆகையால், தான்போய் எப்படியும் அந்த விபரீதக் காட்சியைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது. ஆகவே, அவள் கரை கடந்து தத்தளிக்கும் தன் மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொள்ள முயற்சித்தவளாய் இருக்க, அவளுக்குப் பக்கத்திலிருந்த ஸ்திரீ போலீஸ் கமிஷனரைப் பார்த்து, “ஏதேது! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தக் கலியாணசுந்தரம் எங்கே போனாலும், அவருடைய மனம் கெட்ட வழியில் இறங்கி இருப்பதற்கு அனுகூலமாக அவ்விடத்தில் ஒரு பெண்ணும் வந்து காத்துக் கொண்டி ருக்கிறாள் போலிருக்கிறதே. மற்ற இடங்களில்தான் அது சாத்தியப்படுமென்றால், பாராக்காரர்கள் பந்தோபஸ்தாக