பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 26了 உடனே கீழே இறங்கினார்கள். கமிஷனரினதுமாளிகைக்கு வந்து செய்தி சொன்ன பாராக்காரனை அவர் உடனே அனுப்பி விட்டார் ஆகையால், அவன் சிறைச்சாலையின் வாசலில் ஆயத்தமாக நின்று அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருந்தான். வண்டியில் வந்திறங்கிய போலீஸ் கமிஷனரையும் இரண்டு ஸ்திரீகளையும் பாராக்காரன் அழைத்துக்கொண்டு சிறைச்சாலைக்குள் நுழைந்து பற்பல கூடங்களையும் தாழ்வாரங்களையும் கடந்து மேன்மாடத்திற்கு அழைத்துச் சென்றான். கலியாணசுந்தரம் அடைபட்டிருந்த அறை நெருங்கவே, ஷண்முகவடிவை அழைத்து வந்த ஸ்திரி மெதுவாகப் பின்தங்கிப் படியிலேயே நின்றுவிட்டாள். ஷண்முகவடிவினது சஞ்சலமும் கலக்கமும் அப்போது உச்ச நிலையை அடைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆகாயத்தை அளாவிய ஒரு மலையின் உச்சியில் நிற்கும் ஒருவர் செங்குத்தாக இருக்கும் அதன் பக்கத்தில் நெருங்கி பாதாளத்தில் விழுவதற்கு அடி எடுத்து வைப்பது போலவும், காலடியில் கிடக்கும் பெருத்த நாகப் பாம்பின் மேல் காலை வைப்பவள் போலவும், சகிக்கமாட்டாத வேதனை அடைந்த வளாய் ஏதோ ஒரு பிரம்மாண்டமான அபாயம் இருப்பதாக நிச்சயமாக உணர்ந்தும், தடுக்க முடியாதபடி, அதனிடம் தானே செல்பவள் போல அந்த அறையண்டை சென்றாள். அறைக்குள் உண்டான கலியாணசுந்தரத்தின் குரலைக்கேட்கவே, அவளது அங்கம் எல்லாம் மயிர்ச் சிலிர்ப்படைந்தது. பெருத்த திகிலும் குழப்பமும், கலவரமும் எழுந்து அவளது மனதை வதைத்துச் சித்திரவதை செய்தன. கலியாணசுந்தரம் அன்பான குரலில் யாரோ ஒரு பெண்ணை உருக்கமாக உபசரித்து அழைத்ததும் நன்றாகத் தெரிந்தது. 'என்ன விபரீதம்! அவர்கள் சொன்னது உண்மை போல் இருக்கிறதே! இவர் இப்படியும் நடந்து கொள்வாரோ? இரவில் அகால வேளையில் தனியாக அடைபட்டிருக்கும் சிறைச்சாலையில் இவர் இப்படிப் பேசவேண்டிய முகாந்திரம் என்ன? யாரோடு பேசுகிறார்?"