பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பூர்ணசந்திரோதயம்-3 என்று கோடானுகோடி எண்ணங்களும் சந்தேகங்களும் தோன்றின. தான் பூமியில் நிற்பதும் ஆகாயத்தில் பறப்பதும் தெரியாத மகா குழப்பமான சொப்பனநிலைமையில் ஷண்முக வடிவு நிரம்பவும் தத்தளித்துக் கைகளைப் பிசைந்து கொண்டு நின்ற சமயத்தில் அந்த அறையின் கதவு பாராக்காரனால் திறக்கப்பட்டது. முன்னோர்அதிகாரத்தில் விவரிக்கப்பட்டபடி அபிராமி என்னும் யெளவனப் பெண் கீழே வீழ்ந்து கிடக்க, கலியாணசுந்தரம் சிறைச்சாலையின் விதிகளுக்கு மாறாக விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவளது முகத்தில் தண்ணிரைத் தடவி உபசரித்து, 'ஆ அபிராமீ. இந்திரபாயி என்ற பொய்ப் பெயர் வைத்துக் கொண்டு வந்து நீ எவ்வளவு நாழிகை நேரம் என்னை ஏமாற்றி வதைத்துவிட்டாய்! உன்னுடைய பிடிவாதம் எல்லாம் என்னிடம் செல்லும் என்றா நினைத்தாய்; நானா ஏமாறு கிறவன்!” என்று கூறியவண்ணம் அவளது வாயைத் திறந்து தண்ணீரை வார்க்க முயன்றான். அவன் அவ்வாறு பேசியதில் முதல் வாக்கியத்தில் பாதி பாகம், அவர்கள் கதவைத் திறந்த ஒசையில் மறைந்துபோய் விட்டது. ஆகையால், 'நீ எவ்வளவு நாழிகை நேரம் என்னை ஏமாற்றி வதைத்துவிட்டாய்” என்பது முதல் முடிவுவரையில் அவர்களது செவியில் பட்டது. ஆகையால், பாராக்காரன் அந்த வார்த்தைகளுக்கு வேறு விதமான அர்த்தம் செய்து, அந்தப் பெண்ணை அவன் வற்புறுத்தியதாகவும் அவள் இணங்காமையால், அவன் அவளைப் பலாத்காரம் செய்து அவளது கற்புக்குப் பங்கம் இழைத்து விட்டதாகவும் கூறிவிட்டான். அதற்கு ஒத்தபடி அபிராமியும் உடனே எழுந்து கலியாணசுந்தரத்தின் மீது குற்றம் சுமத்தியதன்றி, தனது சிரத்திலிருந்து ஒழுகிய இரத்த வெள்ளத்தையும் காட்டினாள் ஆதலால், அதையும் கண்டு, சுவரில் செய்யப்பட்டிருந்த பெரிய துவாரத்தையும் கண்ட ஷண்முகவடிவு முற்றிலும் பிரமிப்படைந்து கலியாண சுந்தரத்தினது முகத்தை நோக்க, அவன் வாய் திறந்து பேச