பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பூர்ணசந்திரோதயம்-3 மனிதரும் பழக்கமில்லை. நீங்களும் என்னைப் போலவே இந்த ஊருக்குப் புதியவர்கள். உங்களுக்கும் தெரிந்த மனிதர்கள் இருக்கமாட்டார்கள். ஆகையால், நாம் இருவரும் சேர்ந்து பிரயாசைப்பட்டு போலீஸார் செய்யும் பிரயத்தனங்களுக்கு விரோதமாக வேலை செய்து அவரைத் தப்பவைக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. இனி அவருடைய முகத்தில் விழிக்கவும் அவரோடு பேசவும் எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. இனி ஒரு நிமிஷம் கூட இந்த ஊரில் இருக்க என்மனம் சம்மதிக்கவில்லை. என்னுடைய வேலைக்காரிக்கும் இப்போது உடம்பு சுமார்ப்பட்டிருக்கலாம். இன்றைய பகல் முழுவதும் நாங்கள் இந்த ஊரில் இருந்தால், அவளுக்கு உடம்பு அநேகமாய் சரிப்பட்டு விடும் என்று நினைக்கிறேன். நாளைக்கு விடியற்காலையில் இந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போய் விட வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கே இருந்து செஞ்சிக்கோட்டை வரைக்கும் வரும் படி ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டால், அங்கே இருந்து தஞ்சாவூர் வரையில் வேறே வண்டி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் நல்ல எண்ணத்தோடு எனக்கு இதுவரையில் எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறீர்கள். அவைகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். கடைசி உதவியாக எனக்கு நீங்கள் இன்னொரு காரியம் செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய வேலைக்காரி எழுந்து நடமாடினால், எங்களுக்கு வேண்டிய வண்டியை அவள் அமர்த்திக்கொண்டு வருவாள். இப்போது நானே போய் அந்தக் காரியத்தைச் செய்யவேண்டியிருக்கிறது. நீங்கள் போலீஸ் கமிஷனரவர்கள் மூலமாக எனக்கு ஒரு வண்டி அமர்த்தி அது விடியற்காலையில் இங்கே வரும்படிச் செய்ய வேண்டும். அந்தச் சிரமத்தை நான் உங்களுக்குக் கொடுத்தே தீரவேண்டி இருக்கிறது' என்று நிரம்பவும் பரிதாபகரமாகக் கூறினாள். அதைக் கேட்ட அந்த ஸ்திரீ சிறிதுநேரம் சிந்தனை செய்த பிறகு விசனகரமான பார்வையாக ஷண்முகவடிவை நோக்கி, “நீ