பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273 சொல்வதும் நியாயமாகத்தான் இருக்கிறது. நாங்கள் உனக்குக் கடிதம் எழுதி உன்னை எதற்காக இங்கே வரவழைத்தோமோ, அந்தக் கருத்து நிறைவேறாமல் போனதே என்பதை நினைக்க எனக்கு நிரம்பவும் விசனம் உண்டாகிறது. அந்த மனிதர் சிறுபிள்ளைத்தனத்தினால் ஏதோ தவறைச் செய்து விட்டார் என்று நினைத்து அவரை இந்தத் தடவை தப்பவைத்து இனியும் அவர் அப்படி செய்யாதபடி புத்திமதி சொல்லி உங்கள் இருவரையும் ஊருக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். அதற்குள் இப்படிப்பட்ட அட்டுழியம் நடந்துவிட்டது. சிறைச்சாலையிலேயே அவர் செய்திருக்கும் காரியத்தைப் பார்த்தால், அவர் வெளியில் வந்தபின் சும்மா இருப்பவராகத் தோன்றவில்லை. அவருடைய சுயபுத்தி இனி திரும்பும் என்று யாரும் நினைக்கமுடியாது. நீ சொல்வதுபோல, நீயும் நானும் இனி என்ன முயற்சி செய்தாலும் போலீஸாருடைய கட்சிதான் ஜெயிக்கும். அவருடைய தலைவிதி எப்படி இருக்குதோ, அதுபோல நடக்கட்டும். இனி அவர் தப்புவதும், அவருடைய புத்தி நல்ல வழியில் திரும்புவதும் தெய்வத்தின் அனுக்கிரகத்தால் ஏற்பட வேண்டுமேயன்றி, மனித எத்தனத்தால் முடியப் போகிறதில்லை. இந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போக வேண்டும் என்று நீ செய்த தீர்மானம் சரியானதே. ஆனால், நீ அறியாத பெண். உன்னை மறுபடியும் தனியாக அனுப்புவது சரியல்ல. உனக்கு நான் இதுவரையில் உண்மையான எந்த அனுகூலமும் செய்ய முடியாமல் போய்விட்டது ஆகையால், நீ ஊருக்குத் திரும்பிப் போகும் விஷயத்திலாவது உனக்கு நான் துணையாக வந்து நீ பத்திரமாக ஊர்போய்ச் சேரும்படி செய்தால், அதுவாகிலும் ஓர் அனுகூலமாக இருக்கும் என்ற நினைக்கிறேன். நானும் இந்த ஊருக்கு வந்து பலநாட்கள் ஆகின்றன. சில தினங்களுக்கு முன்பே நான் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போக உத்தேசித்தேன். இந்தக் கலியாணசுந்தரத்தின் சங்கதியைக்கேட்டு நான் உனக்குக்கடிதம்