பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275, நீங்கள் கஸ்பா தஞ்சாவூருக்கே போகிறவர்களா? அல்லது, பக்கத்திலுள்ள ஏதாவது கிராமத்துக்குப் போகிறவர்களா?” என்றாள். - அந்த ஸ்திரீ, "நான் இருப்பது கஸ்பா தஞ்சாவூரே. நான் அங்கேதான் போய்ச் சேரவேண்டும். இந்த ஊரில் எனக்கு ஒரு வேலையும் இல்லை. இந்த நிமிஷத்தில்கூட நான் புறப்பட்டு விடலாம். அதிருக்கட்டும். நீ எந்த ஊருக்குப் போகப் போகிறாய்? நேராகத் திருவாரூருக்குத் தானே போக வேண்டும்?' என்றாள். ஷண்முகவடிவு சிறிது யோசனை செய்து, “நானும் உங்களோடு தஞ்சாவூருக்கே வரலாம் என்று நினைக்கிறேன். அங்கே என்னுடைய அக்காள் இருக்கிறதாக நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் அல்லவா? ஊரைவிட்டு நான்வந்ததுதான் வந்தேன்; அக்காளையும் பார்த்துவிட்டு இந்தச் சங்கதியையெல்லாம் அவளிடம் நேரில் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் என்னைவிட்டுப் பிரிந்து போயும் அதிக காலமாகிறது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. நேற்று ராத்திரி அந்த சிறைச் சாலைச் சம்பவம் நேர்ந்திராவிட்டால், நான் எப்படியும் இன்னும் சில தினங்கள் வரையில் இந்த ஊரிலேயே இருக்க நேருமல்லவா? அந்தக் காலத்தைத் தஞ்சாவூருக்குப் போவதில் உபயோகப் படுத்திக் கொள்ளுகிறேன். நான் ஊருக்குப் போய், என் அத்தையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நான் மறுபடியும் தஞ்சாவூருக்குப் போய் அக்காளைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்க்குமோ வாய்க்காதோ. இப்போது அத்தை நல்ல பொறுப்பாளிகளான மனிதருடையவசத்தில் இருப்பதால், நான் அந்தக் கவலையில்லாமல் தஞ்சாவூருக்குப் போய்த்திரும்பலாம் என்று நினைக்கிறேன். அதோடு நீங்கள் எனக்குத் துணை வருகிறீர்கள் ஆகையால், நான் செளக்கியமாகத் தஞ்சா ஆருக்குப் போகலாம். அங்கே உங்களுடைய ஜாகையில்