பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூர்ணசந்திரோதயம்-3 அவர்களது அடக்கமான நடத்தையிலிருந்து தெளிவாக விளங்கியது. ஆனால், அத்தனை நாட்கள் கழிந்தும், அம்மாளு தனது முடிவை ஏன் தெரிவிக்காமல் இருக்கிறாள் என்ற யோசனை மாத்திரம் கலியாணசுந்தரத்தின் மனதிலிருந்து வந்தது. அதன் காரணத்தை அவன் உள்ளபடி தெரிந்துகொள்ள மாட்டாமல் இருந்தாலும், இரண்டாவது பெண்ணான தனம் என்பவள், தன்னை வசியப்படுத்தும் பொருட்டு அவளால் ஏன்ற சாகசக்கியங்களை எல்லாம் உபயோகித்து வருகிறாள் என்பதை மாத்திரம் அவன் உணர்ந்து கொண்டான். ஆனாலும், அவற்றை யெல்லாம் அவன் கவனியாதவன் போல இருந்து, அவளது விஷமங்களுக்கு எல்லாம் தான் இடம் கொடுக்கவில்லை என்பதை நன்றாகக் காட்டிவந்தான். அது ஒரு வியாழக்கிழமை; அன்றையதினம் தபால் மூலமாக அவர்களுக்கெல்லாம் கடிதங்கள் வந்தன. கலியாணசுந்தரத் துக்கும் சில கடிதங்கள் வந்தன. அவற்றுள், அவனது ஆருயிர்க் காதலியான ஷண்முகவடிவினால் எழுதி அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில் அவள் தனது rேமத்தையும், தனது அத்தை, சிவபாக்கியம் முதலிய மற்றவரது rேமத்தையும் எழுதியிருந்ததன்றி, தான்.இராப்பகல் அவனது நினைவாகவே இருந்து வருவதாகவும், கலியான சுந்தரம் எண்ணிப்போகும் காரியம் தெய்வத்தின் அருளால் பலித்து அவன் அதிசீக்கிரத்தில் திரும்பி ஊருக்கு வர வேண்டும் என்று தான் சதாகாலமும் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தன. நமது யெளவனப் புருஷன் ஷண்முகவடிவை நேரில் கண்டவன்போல கரைகடந்த மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்து அந்தக் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் பன்முறை படித்தது அன்றி அன்றையதினம் இரவில் நெடுநேரம் வரையில் கண்விழித்து அவளுக்கு அனுப்புவதற்காக நீண்ட மறுமொழி எழுதினான். தான் அப்போதும் முத்துலக மி முதலியோருடன் இருப்பதாகவும் விஷயத்தைத் தான்