பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - பூர்ணசந்திரோதயம்-3 காணப்போவோம் என்ற ஆவலும் ஆசையும் கட்டிலடங்காமல் எழுந்து அவளது மனதை வதைத்துக் கொண்டிருந்தது. அவள் தனது துன்பங்களை எல்லாம் பாராட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று அரும்பாடு பட்டாள். ஆனாலும், அவளது தோற்றத்தில் ஒருவித அயர்வும் துயரமும் இயற்கையிலேயே காணப்பட்டன.துக்கமென்ற கொடிய விஷமானது அவளுக்குத் தெரியாமல் அவளது மனத்தையும் ஹிருதயத்தையும் படிப்படியாக அறித்துத் தின்று அவளது உயிரைச் சிறுகச் சிறுக குடித்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது. அளவற்ற வாத்சல்யமும் பாசமும் நிறைந்த தனது ஆருயிர்ச்சகோதரியைத் தான் கண்டு ஆனந்தமடையலாம் என்ற எண்ணம் அடிக்கடி அவளது மனதில்தோன்றி அதைத் திடப்படுத்தின. ஆனாலும், அவளது முகம் சந்தோஷத்தினாலாவது புன்னகையினாலாவது மலரவே இல்லை. இந்த உலகத்திலுள்ள சகலமான வெளிச்சமும், பிரகாசமும், ஜோதியும் அவிந்துபோய், அந்தகாரமே எங்கும் வியாபித்து உலகத்தைக் கப்பிக்கொண்டது போல அவளது மனம் உணர்ந்தது. மகா பயங்கரமான கடலில் கடுமையான புயல்காற்றினாலும் மழையினாலும் அகோரமாகக் கொந்தளித்தெழுந்து ஆகாயத்தை அளாவப் பொங்கிப் பெருத்த குன்றுகளையும் பாறைகளையும் பெயர்த்து வெகுதூரம் அப்புறப்படுத்தத்தக்க உரத்தோடு வீசும் பிரளய காலத்து அலைகளின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கும் ஒர் அற்பப் படகு போலத் தான் உய்யும் வழியின்றித் தவித்திருக்கும் நிலைமையில் தனக்கு அந்தச் சீமாட்டியின் சிநேகமும் உதவியும் கிடைத்தது நமது ஷண்முக வடிவுக்கு ஒரு பெருத்த ஆறுதலாகவும் பற்றுக்கோலாகவும் இருந்தது. கலியாணசுந்தரத்தின் நினைவையும் அவன் செய்த காரியங்களையும் அடியோடு மறந்துவிட வேண்டும் என்று அந்த மெல்லிய மங்கை எவ்வளவு அதிகமாக முயன்றும், அது பயனற்ற முயற்சியாக முடிந்தது. அவள் தனது கவனத்தை