பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம்-3 விஷயங்களை சோமசுந்தரம் பிள்ளைக்குச் சொல்லலாம். என்றாள். அந்த ஸ்திரீ, "இந்த சோமசுந்தரம்பிள்ளைக்கும் உங்களுக்கும் என்ன விதமான உறவு முறைமை? அவரை நீ இதற்கு முன் பார்த்திருக்கிறாயா?" என்றாள். வுண்முக வடிவு, 'அவருக்கும் எங்களுடைய தகப்பனாருக்கும் நெருங்கிய சிநேகம் என்று எங்களுடைய அத்தை சொல்லியிருக்கிறார்கள். நான் அவரை நேரில் பார்த்த தில்லை' என்றாள். அந்த ஸ்திரீ,"சரி, அப்படியானால், அவரிடம் உன்னுடைய வரலாற்றைச் சொல்வது உசிதமானதல்ல. நான் முதலில் உன்னுடைய அக்காளிடமே சங்கதிகளையெல்லாம் சொல்லி, அவள் என்ன சொல்லுகிறாள் என்பதைக் கேட்டுக்கொண்டு வருகிறேன்' என்று கூறிய பிறகு தனது வேலைக்காரன் ஒருவனை அழைத்து ஒரு வண்டியைப் பூட்டச் செய்து அதற்குள் உட்கார்ந்துகொண்டு வண்டியை ஒட்டச் செய்தாள். அந்த வண்டி அவளது மாளிகையில் இருந்த தெருவை விட்டு வேறொரு தெருவிற்குள் நுழைந்து மறைந்தவுடனே, அவள் ஸாரதியை அழைத்து வண்டியை வடக்கு ராஜவீதியின் வழியாக ஒட்டிக்கொண்டு போகும் படி சொல்ல, வண்டி அவ்வாறு போகத் தொடங்கியது. அவ்விடத்தில் குறுக்கிட்ட மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையண்டை வந்தவுடனே அந்த ஸ்திரீ வண்டியை நிறுத்தச் செய்து கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி வாசலில் நின்ற பாராக்காரனைப் பார்த்து, “ஏனப்பா! எஜமான் உள்ளே இருக்கிறாரா?' என்று கேட்க, "ஓ! இருக்கிறார்கள்; வெல்வெட்டு மாடத்தில் ஏதோ புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் நேராக மேலே ஏறிப் போகலாம்' என்று நிரம்பவும் வணக்கமாக மறுமொழி கூறினான்.