பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பூர்ணசந்திரோதயம்-3 இருக்கட்டும். முதலில் உட்கார்ந்து கொள் ; நிற்க வேண்டாம்' என்று மகிழ்ச்சி ததும்பிய முகத்தோடு மொழிந்தார். அதைக் கேட்ட அம்மணிபாயி அளவற்ற ஆனந்தம் கொண்டவளாய்க் குலுங்கக் குலுங்க நகைத்த வண்ணம் ஸோபாவின் மீது உட்கார்ந்துகொண்டு, 'ஐசுவரியத்தில் தங்களுக்குச் சமமாகச் சொல்லக் கூடியவர்கள் இந்த உலகத்தில் எனக்குத் தெரிந்தவரை யாரும் இல்லை. தெய்வலோகத்தில் குபேரன் என்று ஒருவன் இருப்பதாக ஜனங்கள் சொல்லு கிறார்கள். ஆனால், அவனை யாரும் பார்த்தது இல்லை. அந்தக் குபேரனுடைய செல்வம் எல்லாம் ஏட்டுச் சுரக்காயாகவே இருக்கிறது. அவனுடைய செல்வத்தில் ஒரு காசுகூட யாருக்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆகையால், வார்த்தைகளால் புகழுவதற்குப் பதிலாக வைரஸரங்களைக் கட்டி மாலை போடும் யோக்கியதை தங்களிடம் பூர்த்தியாக இருக்கிறது. யோக்கியதை மாத்திரத்தோடு நிற்காமல், அப்படியே காரியத்தில் செய்யும் தயாளகுணமும் இருக்கிறது. ஆகையால், எஜமானருடைய மனம் சந்தோஷப்பட்டு எதைச் செய்தாலும் அதை அடியாள் ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டவளாகவே இருக்கிறேன். ஆனால், முக்கியமாக ஒரு விஷயம் நான் தங்களிடம் மனுச் செய்து கொள்ளுகிறேன். எஜமானர் சொன்னது போல; இந்த உலகத்தில் சிரேஷ்டமான பொருள் எங்கேயாவது இருந்து என்கண்ணில் பட்டால், எஜமானருடைய நினைவே என் மனசில் உண்டாகிறது. எஜமானர் எந்தப் பொருளைக் கண்டால் உண்மையிலேயே ஆனந்தம் உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிகரற்ற ஆனந்தத்தை எஜமானர் அடையச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய முக்கியமான ஆசை அந்த ஆசை என் மனசைவிட்டு எப்போதும் நீங்குகிறதே இல்லை. அதனாலேதான் நான் இன்று காலையில் வந்தவுடனே கடிதம் எழுதி தங்களுக்கு அனுப்பி வைத்தேன். இதனால் எனக்குப் புகழ்ச்சியாவது, பொருளாவது வேண்டும்