பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 அவர்களிடம் பிரஸ்தாபித்து விட்டதாகவும், அவர்கள் யோசித்து முடிவு சொல்வதாக வாக்கு அளித்திருப்பதாகவும் தனது அலுவலைத் திருப்திகரமாக முடித்துக்கொண்டு தான் வெகு சீக்கிரத்தில் திரும்பி ஊருக்கு வந்து விடுவதாகவும் அவன் கடிதம் எழுதி முடித்து அதை மறுநாளைய தபாலில் அனுப்பி வைத்தான். • அதன்பிறகு வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் கழிந்தன. அப்போதும் அம்மாளு தங்களது முடிவைத் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வந்தாள். தான் அவளோடு பேசியபின் பலநாட்கள் கழிந்துவிட்டன. ஆகையால், தான் அதற்குமேலும் சும்மா இராமல் அவளிடம் பேசி அவளது முடிவைக் கேட்க வேண்டும் என்று கலியாணசுந்தரம் எண்ணிக் கொண்டான். அதற்குத் தகுந்த சந்தர்ப்பம் ஒன்றும் வாய்த்தது. ஆகையால், அவன் அம்மாளுவைத் தனிமையில் கண்டு கேட்க, அவள் மறுநாள் தினம் தான் தவறாமல் தங்களது முடிவைத் தெரிவித்து விடுவதாக உறுதியாக வாக்களித்தாள். அவர்கள் ஒருவேளை அன்னத்தம்மாளுக்குக் கடிதம் அனுப்பி, அவளது மறுமொழியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் களோ என்ற சந்தேகம் அவனது மனதில் சில தினங்களாக இருந்துவந்தன. அவள் கூறிய மறுமொழியினால், அந்த சந்தேகம் பலப்பட்டது. ஆகையால், அவன் மறுநாளினது வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். அன்றையதினம் சனிக்கிழமை. ஆதலால், அந்த ஊரிலிருந்து ஒரு பிரபல நாடகக் கம்பெனியில் ஒரு சிறந்த நாடகம் நடைபெற்றது. அதைப் பார்ப்பதற்காக எல்லோரும் போய்விட்டு இரவு பதினொரு மணிக்குத் திரும்பிவந்து போஜனம் செய்து தத்தம் விடுதியை அடைந்தனர். கலியாணசுந்தரம் தனது படுக்கையை விரிக்க முயன்ற சமயத்தில் அதன் மேல் இருந்த ஒரு சிறிய கடிதம் அவனது திருஷ்டியில் பட்டது. அவன் மிகுந்த வியப் போடு அதை