பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29O பூர்ணசந்திரோதயம்-3 வற்புறுத்திக்கூறியவண்ணம் எழுந்துபோய், அம்மணிபாயியின் கையைப் பிடித்திழுத்து அவளது கழுத்தில் அந்த ஹாரத்தை அணிந்தார். அவள் அதைப்பெற மனமற்றவள் போல நடித்து நாணிக்கோணி நன்றியறிதலினாலும் பிரியத்தினாலும் இளகிக் கிலேசமடைந்த முகத்தினளாய்த் தனது இருகைகளையும் கூப்பி அவரை வணங்கிய வண்ணம், கர்ண மகாராஜன் என்றால் எஜமானருக்கேதகும். தங்களை அண்டியிருக்கும் மனிதர் அற்ப உதவி செய்தாலும் அதை மலை போல பாவித்து சப்த மேகங்கள் பொழிவதுபோல இப்படி ஐசுவரியத்தை வாரிச் சொரியும் வள்ளல் வேறே யார் இருக்கப் போகிறார்கள் சரி; தாங்கள் மனமுவந்து சன்மானித்ததை ஏற்றுக்கொள்ளாவிட்டால்,தங்கள் மனசுக்கு வருத்தமாக இருக்கும். ஆகையால் இதை வகித்துக் கொண்டேன்' என்று கூறினாள். மறுபடியும் ஜெமீந்தார் தமது ஆசனத்தில் அமர்ந்தவராய், “ஏதேது நீ திரிகால ஞானமுடைய மகரிஷிபோல இருக்கிறாயே! உன்னிடம் ஞானதிருஷ்டி ஏதாவது உண்டா? இந்தப் பெண்ணை நீ கோலாப்பூரிலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருப்பதாக எழுதியிருக்கிறாயே! அவ்வளவு தூரத்திலுள்ள தேசத்தில் இந்தப் பெண் இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது? நீ எப்போது அந்த ஊருக்குப் போனாய் ? இவளை எப்படி அழைத்து வந்தாய் ? எல்லா வற்றையும் விவரமாகச் சொல்” என்றார். அம்மணிபாயி, "இந்தப் பெண் கோலாப்பூரில் இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டு நான் அந்த ஊருக்குப் போகவில்லை. நான் சிறிய பெண்ணாக இருக்கையில் இந்த ஊருக்கு வந்துவிட்டேன். ஆனாலும், என்னுடைய சொந்த ஊர் கோலாப்பூர் என்பதை நான் ஏற்கெனவே பல தடவைகளில் தங்களிடம் தெரிவித்திருக்கிறேன். அது தங்களுக்கு நினைவு இருக்கலாம். அந்த ஊரிலுள்ள என் அத்தையின் புருஷர் போலீஸ் கமிஷனர் உத்தியோகம் பார்த்து வருகிறார். என் அத்தைக்கு உடம்பு நிரம்பவும் அசெளக்கியமாக இருந்ததால்,