பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2.91 அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனிதர்கள் அங்கே யாரும் இல்லை ஆகையால், உடனே வரும்படி அவர் எனக்குக் கடிதம் எழுதினார். சுமார் இருபது நாள்களுக்கு முன் நான் இந்த ஊரைவிட்டுப் போனேன். என் அத்தைக்கு உடம்பு சரிப்பட்டு விட்டது. நான் அங்கே இருந்து புறப்பட்டு இன்று காலையில் தான் இங்கே வந்தேன். நான் அந்த ஊரில் இருந்த காலத்தில் இந்தப் பெண்ணை நான் அந்த ஊர் அரண்மனையில் கண்டேன். நான் இதுவரையில் அபூர்வமான அழகுடைய எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இவளைக் கண்டவுடன் என் மனமே முற்றிலும் பிரமிப்படைந்துவிட்டது. இவ்வளவு சிரேஷ்டமான அழகும் சாந்தகுணமும் பணிவும் பொருந்திய பெண் இந்த உலகத்திலேயே இருக்கமாட்டாள் என்ற அபிப்பிராயம் உடனே உண்டாகிவிட்டது. இப்படிப் பட்ட மகா உத்கிருஷ்டமான பெண்மயிலைத்தாங்கள் கண்டால் எவ்வளவு அதிகமாக ஆனந்தம் அடைவீர்கள் என்ற எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. ஆகையால், நான் மெல்ல இவளோடு பழக்கம் செய்துகொண்டு பலவகையில் இவளுடைய மனசை மயக்கி இவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பெண்ணினுடைய சொந்த ஊர் நம்முடைய திருவாரூருக்குப் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறதாம். அங்கே இருந்து இவள் ஏதோ காரியமாகக் கோலாப்பூருக்கு வந்தாளாம். இவளுடைய அக்காள் இந்த ஊரில் எங்கேயோ இருக்கிறாளாம். அவளைப் பார்க்க வேண்டும் என்று இவள் சொன்னாள். அவளிடம் கொண்டுவந்து சேர்ப்பதாக உறுதி சொல்லி நான் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். தங்களிடம் கொண்டு வந்து விடுவதற்காக நான் இவளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன் என்பது இவளுக்குத் தெரியாது. இவளுடைய அக்காளிடம் கொண்டுவந்து விட்டுவிடுவதாகச் சொல்லி நான் இவளைத்தங்களிடம் கொண்டுவந்து விட்டுவிடுகிறேன். மற்றக் காரியங்களையெல்லாம் எஜமானர்தான்சரிப்படுத்திக் கொள்ள