பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பூர்ணசந்திரோதயம்-3 கோயில் ஒன்று இருக்கிறது. அங்கேயுள்ள அம்மன் பிரத்தியrமான தெய்வம்; நல்ல வரப்பரஸாதி. நொண்டி, முடம், பொட்டை முதலியோர் அங்கே போய் வேண்டுதலை செய்துகொண்டு அம்மனைச் சேவித்து வந்தால், அவர்களுடைய பிணக்குகள் எல்லாம் அற்றுப்போகின்றனவாம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஆயிரக் கணக்கான ஜனங்கள் போய் அம்மனைக் கும் பிட்டு விட்டு வருவது வழக்கம். இந்த சோமசுந்தரம் பிள்ளையின் சம்சாரத்தினுடைய கண்ணில் பூ விழுந்திருக்கிறதாம். அதற்காக அந்த அம்மனுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு அந்த அம்மாள் இன்றைய காலையில் அந்த ஊருக்குப் போனார்களாம். உன் அக்காளும் அந்த அம்மாளோடு கூடப் போனாளாம். சாயுங்காலம் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போனார்களாம். இந்நேரம் அவர்கள் திரும்பி வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். கமலத்தின் தங்கையாகிய நீ வந்திருக்கிறாய் என்று நான் சோமசுந்தரம் பிள்ளையினிடம் சொன்னேன். அவர் அதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்ததன்றி, உன்னைப் பார்க்கவேண்டும் என்று நிரம்பவும் ஆசையோடு இருக்கிறார்; உன்னுடைய அக்காள் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பி வந்தவுடனே அவளிடம் உன்னுடைய வருகையைப் பற்றித் தெரிவித்து அவளையும் சந்தோஷப் படுத்துவதாகவும் அவர் சொன்னார். இந்நேரம் உன்னுடைய அக்காளும் வந்திருப்பாள். நீ வந்திருக்கிறாய் என்ற சங்கதியும் அவளுக்கு எட்டியிருக்கும். எல்லோரும் உன்னுடைய வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்தி ருப்பார்கள். ஆனால், எங்களுடைய வீட்டிலிருந்து உன்னை அவ்விடத்துக்கு எப்படி அனுப்பிவிடுகிறது என்கிற துக்கம் தான் என் மனசை வதைக்கிறது. இருந்தாலும், நீங்கள் எல்லோரும் ஒன்று கூடுவதால் அடையும் நிகரற்ற ஆனந்தத்துக்கு இடைஞ்சலாக நான் குறுக்கே நிற்பதும் நியாயமில்லை. நான் அவருடைய மாளிகையை விட்டுப் புறப்பட்டு வேறு பல இடங்களுக்குப்