பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பூர்ணசந்திரோதயம்-3 அந்த இரவில் ஷண்முகவடிவிற்கு முதல்தரமான விருந்து ஏழு மணிக்குள் தயாரிக்கும்படி அம்மணிபாயி அன்றையதினம் மத்தியானத்திலேயே தனது வேலைக்காரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டுப் போயிருந்தாள். ஆகையால், மணி ஏழு அடிக்கும் முன் எல்லாக் காரியங்களும் சித்தமாக முடிந்து போயின. அம்மணிபாயும் ஷண்முகவடிவும் ஒரு பந்தியாக போஜனத்திற்கு அமர்ந்தனர்; இரண்டு பெரிய தலைவாழை இலைகள் போடப்பட்ட பிறகுதான், தனக்கு அன்றையதினம் அவர்கள் தடபுடலாக ஏதோ பெரிய விருந்து தயாரித்திருக்கி றார்கள் என்று ஷண்முகவடிவு ஊகித்துக் கொண்டாள். கோலாப்பூரில் நிகழ்ந்த மகாதுக்ககரமான விபரீத சம்பவங் களுக்குப் பிறகு அவளது மனம் அடியோடு முறிந்து உலகத்திலேயே விரக்தியடைந்து போயிருந்தது ஆகையால், அவளது புத்தி தனது உயிர் நிற்பதற்கு அத்தியாவசியமான சாதாரண போஜனத்தைக்கூட நாடாமல் இருந்தது. ஆகையால், அப்படிப்பட்ட பரம சங்கடமான நிலைமையில் விருந்து என்பதை நினைக்கும் போதே குமட்டல் உண்டாயிற்று. அதுவுமன்றித் தனது ஆரூயிர்ச் சகோதரியான கமலத்தின் வடிவம் அவளது அகக்கண்முழுவதிலும் நிறைந்து நின்றதாகை யாலும், அவளை எப்போது காண்டோம் என்கிற ஆவலினால் மனது துடித்துக்கொண்டிருந்தது ஆகையால், அவளுக்கு அந்தச் சமயத்தில் விருந்து உண்பது நரக வேதனையாகத் தோன்றியது. இருந்தாலும், மகா உபகாரியான அம்மணிபாயினது மனப் போக்கிற்கு உகந்தபடி தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற மனஉறுதியைக் கொண்ட நமது யெளவன உத்தமி அரும்பாடு பட்டுத் தனது அருவருப்பையும் விரக்தியையும் அடக்கிக் கொண்டு அந்த விருந்தை உண்ணத் தொடங்கினாள். அவளது சங்கடத்தை அம்மணிபாயும் தெரிந்து கொள்ளாமல் இருக்கவில்லை. அவள் ஷண்முகவடிவினிடம் ஆழ்ந்த பாசமும் அருமையும் பாராட்டி நிரம்பவும் நயமாகப் பேசத்தொடங்கி,