பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297 'அம்மா ஷண்முகவடிவு! விருந்துண்ணவும் சந்தோஷப்படவும் இது சரியான சந்தர்ப்பம் அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கோலாப்பூரில் நடந்த சம்பவங்களைக் கண்டு உன் மனம் இடிந்து போய்விட்டது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதுவும் அல்லாமல் உன் அக்காளைப் பார்க்கவேண்டும் என்று நீ எவ்வளவு அதிகமான ஆவல் கொண்டிருக்கிறாய் என்பதும் நன்றாகத் தெரிகிறது. இந்த நிலைமையில் நீ எங்கள் வீட்டு சாப்பாட்டைக் கண்டு மகிழ்ந்து போவாய் என்று நான் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், உன் விஷயத்தில் என் மனசில் உண்டாகியிருக்கும் ஒருவித வாஞ்சையும் பாசமும் இவ்வளவு என்று நான் வாயினால் வெளியிட்டுச் சொல்ல முடியவில்லை. அதை ஒருவாறு வெளியிட வேண்டுமென்ற ஓர் அவா என்னைத் தூண்டி இந்த விருந்தைத் தயாரிக்கச் செய்தது. நான் உன்மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படையாகக் காட்டும் குறியே இந்த விருந்து என்று நினைத்துக் கொண்டால் அதுவே போதுமானது. உன் மனசை அதிகமாக வருத்தாமல் நீ எந்தப் பதார்த்தங்களைச் சாப்பிடலாமோ அதை மாத்திரம் சாப்பிடு. உன்னை நான் அதிகமாக வற்புறுத்தவில்லை' என்று ஒருவிதமாகச் சமாதானம் கூறினாள். அவளது கபடம் நிறைந்த சொற்களையெல்லாம் உண்மை யானவைகள் என்றே எண்ணிக்கொண்ட சுத்த ஸ்வரூபிணியான ஷண்முகவடிவு ஒருவாறு முயன்று ஏதோ போஜனம் செய்து முடித்ததாகப் பெயர் பண்ணிக் கொண்டெழுந்தாள். உடனே அம்மணிபாயி அவளுக்குக் குங்குமப் பொட்டிட்டுத்தாம்பூலம் வழங்கி மகா உத்தம குணமுள்ள பதிவிரதா ஸ்திரீ போல நடித்து அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். அப்போது மணி சுமார் எட்டாயிற்று. நன்றாக மூடப்பட்டிருந்த பெட்டி வண்டிக்குள் அவர்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டனர். இடைவெளிகள் நிறைந்த ஜன்னல்கள் மூடப்பட்டன.