உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பூாணசந்திரோதயம்-3 அம்மணிபாயி வண்டிக்காரனை நோக்கி, அடேய், வண்டியை சக்கா நாயக்கர் தெரு சோமசுந்தரம் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு போ” என்று அதிகாரமாகக் கூறினாள். வண்டி உடனே புறப்பட்டுச்செல்லலாயிற்று. அம்மணி முன்னரே ரகசியத்தில் வண்டிக்காரனிடம் பேசி வண்டியை அவன் உண்மையில் எவ்விடத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்பதைச்சொல்லி எச்சரித்து வைத்திருந்தாள் ஆகையால், அவன் பல தெருக்களின் வழியாக அதை ஒட்டி சக்கா நாயக்கர் தெருவுக்குப் போவதாகப் போக்குக் காட்டி வடக்கு ராஜ வீதியை அடைந்து, மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையின் வாசலில் வண்டியை நிறுத்தினான். தனது விருப்பப்படி வண்டி சரியான இடத்தில் நிறுத்தப்பட்டி ருக்கிறது என்பதை இடைவெளியால் நிச்சயித்துக் கொண்ட அம்மணிபாயி, சரி; சோமசுந்தரம் பிள்ளையின் வீடு வந்து விட்டது. இறங்குவோம்' என்று கூறிய வண்ணம் ஜன்னலை விலக்கிக் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்க, அவளைத் தொடர்ந்து ஷண்முகவடிவும் வண்டியைவிட்டுக் கீழே இறங்கி பக்கத்திலிருந்த பிரம்மாண்டமான மாளிகையைக் கண்ணுற்று, 'இதுதானா என் அக்காள் இருக்கும் இடம்?' என்று கட்டி லடங்கா வியப்போடு வினவ, உடனே அம்மனிபாயி, 'ஆம் அம்மா! சோமசுந்தரம் பிள்ளை என்றால், என்னவென்று நினைத்துக்கொண்டாய்? இந்த சமஸ்தானத்துக்கே இவர் ஒரு பெரிய கோடீசுவரரல்லவா. இவருடைய மாளிகையில் இருக்கும் செல்வம், இந்த ஊர் மகாராஜனுடைய அரண்மனை யில் கூட இருக்காது. ஆனால் இவருக்கு ஆண் பெண் முதலிய சங்கதி எதுவுமில்லை. அது ஒன்றுதான் இவர்களுக்கு ஒரு பெருத்த குறை. அதனால்தான் இவர்கள் உன்னுடைய அக்காளை விடமாட்டேன் என்கிறார்கள். உன்னுடைய அக்காளுக்கு உண்டாயிருக்கும் அபாரமான அதிர்ஷ்டம் இந்த உலகத்தில் வேறு எவருக்கும் உண்டாகாது என்று இந்த ஊர்