பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 ஜனங்கள் எல்லோரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இவர்களுடைய அளவற்ற எல்லா ஐசுவரியத்தையும் தங்க ளுக்குப் பிறகு உன் அக்காளுக்கே கொடுத்துவிடப் போகிறார் களாம். இதோ இந்த மாளிகையை நிமிர்ந்து பார்! ஆகாயத்தை அளாவி நிற்கிற இந்த மாளிகையின் அற்புதத் தோற்றத்தை உள்ளபடி பார்த்து ஆனந்திக்க ஆயிரங்கண்கள் கூடப் போதாது என்றே நினைக்கிறேன். வெளிப் பார்வையே இப்படி மனசை மயக்குகிறதே. இதற்குள் நீ போய்ப் பார்ப்பாயானால், உட்புறத்தைச் சுவர்க்கலோகம் என்றுதான் நினைப்பாய். எங்கு பார்த்தாலும் தனலக்ஷ்மி தாண்டவமாடிக் கொஞ்சுகிறாள். இத்தனையும் உன்னுடைய அக்காளுக்குக் கிடைப்பது என்றால், அவளை மகா சிரேஷ்டமான பாக்கியவதி யென்று யார்தான் புகழமாட்டார்கள்' என்றாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட ஷண்முகவடிவு அளவற்ற பிரமிப்பும் திகைப்பும் அடைந்து, அந்த மாளிகையின் கம்பீரத் தோற்றத்தையும் உற்றுநோக்கித் தனது அக்காளுக்கு அப்படிப்பட்ட அபார சம்பத்து வந்து வாய்ப்பதைப் பற்றி மனதார சந்தோஷமடைந்தவளாய் மெளனப் பேராநந்தத்தில் ஆழ்ந்தவளாய் நடந்தாள். அடுத்த நிமிஷத்தில் தான் தனது அக்காளைக் காணலாம் என்ற நினைவினால் அவளது மனம் அப்போதே நெகிழ்ந்து மலர்ந்து ஆனந்த மயமாக நிறைந்து தவித்துக் கொண்டிருந்தது. உட்புறத்திலிருந்த குபேர சம்பத்தினிடையில் அதற்கெல்லாம் வாரிசுதாரியாக இனிது வீற்றிருக்கும் தனது அக்காளைக் கண்டு, அவளது மகோன்னத தசையைக் குறித்துத் தனது உவகையை வெளியிடாமல், தான் தனதுதுயரத்தைவெளியிட்டு அவளது மனத்தையும் புண்படுத்தி வருத்த நேர்ந்ததே என்ற எண்ணம் அந்தப் பெண்மணியினது மனத்தில் தோன்றி அப்போதே அவளது மனதைக் கலக்கத் தொடங்கியது. அந்த நிலைமையில் அவர்கள் இருவரும் மேன்மாடப்படிகளில் ஏறிச் சென்றபோது, ஷண்முகவடிவு