பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30Ꮊ - பூர்ணசந்திரோதயம்-3 அம்மாணிபாயியை நோக்கி, "ஏனம்மா! இவர்களுக்கு வாரிசு தார்கள் எவருமே இல்லையென்றீர்களே. நெருங்கிய பந்துக்கள் கூடவா ஒருவரும் இல்லை? அவருடைய தங்கை ஒருத்தி இருப்பதாகச் சொன்னிர்களே; அவளுக்கு இந்தச் சொத்தை யெல்லாம் கொடுக்காமல், அன்னிய மனுவியான என் அக்காளுக்குக் கொடுக்க இவர்கள் தீர்மானித்த காரண மென்ன? என்றாள். அம்மணிபாயி, "இவருக்குத் தங்கை ஒருத்தி இருக்கிறாள். ஆனால், அவளுடைய புருஷர் இவர்களுடைய மனசுக்குப் பிடித்த மனிதரல்ல ஆகையால், அந்தத் தங்கை இவர்களிடத்தி லேயே இருக்கிறாள்; இனி புருஷர் வீட்டுக்கே போகமாட்டாள். அந்தத் தங்கைக்கும் இவர்கள் ஏராளமான பொருள் கொடுப்பார்கள். ஆனால் அவளுக்கு இனி எவ்விதச் சந்ததியும் உண்டாக வழியில்லை அல்லவா; அதனால் இவர்கள் உன்னுடைய அக்காளை வளர்த்துக் கொண்டு நல்ல ஒரு புருஷராகப் பார்த்து அவளுக்குக் கட்டிவைக்கப் போகிறார்கள். அவர்களுக்கு ஆண் சந்ததி பிறந்து சகலமான செல்வத்தையும் அனுபவிக்கட்டும் என்பது இவர்களுடைய எண்ணம். அதுவுமன்றி உங்களுடைய தகப்பனாருக்கும் இவருக்கும் ஏதோ நெருங்கிய ரகசியமான பாந்தவ்வியமோ, அல்லது அந்தரங்க சிநேகமோ உண்டாம். அதனால்தான் இவர் உங்களுக்குப் ப்ணம் அனுப்பி நெடுங்காலமாக உங்களுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகிறாராம்' என்றாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு ஒருவாறு திருப்தி அடைந்தவளாய் நடக்க, வெல்வெட்டு மாடத்தின் வாசல் வந்து சேர்ந்தது. அதன் கதவு எப்போதும்போல மூடி வைக்கப்பட்டி ருந்தது. அம்மணிபாயி கதவின் மீது கையை வைக்க, அது மெதுவாகத் திறந்து கொண்டது. உடனே இருவரும் உள்ளே நுழைந்தனர். தமது ஆசனத்தில் அமர்ந்திருந்த மருங்காபுரி ஜெமீந்தார், அவர்கள் வந்ததைக் கண்டு திடுக்கிட்டெழுந்து