பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் շ7 செய்யக் கூடாதென்று ஒரே மும்முரமாக தடுத்துப் பிடிவாதம் செய்துகொண்டிருக்கிறாள். நாங்கள் இருவரும் உங்களிடம் ரகசியமாக ஏதாவது சங்கதி சொல்லி விடப் போகிறோம் என்று எங்களுடைய சின்னம்மாள் வெகு ஜாக் கிரதையாக இருந்து எங்களைக் கவனித்து வருகிறாள். நாளைய தினம் காலையில் காலை போஜனம் சாப்பிட்ட பிறகு நாங்கள் இருவரும் இந்த ஊரிலுள்ள கோவிலுக்குப்போய் வருவதாகச் சொல்லி சின்னம்மாளிடத்தில் அனுமதி பெற்றிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் உங்களிடம் பேசி உங்களுடைய புத்திமதிப்படி நடந்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறோம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள பூஞ்சோலையண்டை நாங்கள் வந்திருந்து உங்களுடைய வருகையை எதிர்பார்த்திருப்போம். தயை செய்து நீங்கள் தவறாமல் அவசியம் அங்கே வந்து எங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தித்து எங்களுக்குச் சரியான வழி காட்டவேண்டுமாய் நான் நிரம் பவும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்ங்னம்: உங்கள் அடிமை, தனம் - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த கலியாணசுந்தரம் அது உண்மையான கருத்தோடும் முற்றிலும் நாணயத்தோடும் எழுதப்பட்ட கடிதமாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனாலும், அது கூட ஏதாவது தந்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றிக்கொண்டிருந்தது. இருந்தாலும், உண்மை இன்னதுதான் என்பது நிச்சயமாகத் தெரிகிறவரையில் தான் எப்படிப்பட்ட தவறான எண்ணமும் கொள்வது தருமமல்ல என்று தீர்மானித்துக் கொண்ட நமது யெளவனப் புருஷன், தனம் கேட்டுக் கொண்டபடி மறுநாள் காலையில் புறப்பட்டுப் போய், கோவிலுக்குப் பக்கத்திலிருந்த சோலையில் அவளைச் சந்திக்க