பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309 உசிதமாகத் தோன்றுகிறது. அப்படியே செய்துவிடுங்கள். எனக்கு நேரமாகிறது. வீட்டில் அவசரமான சில ஜோலிகள் இருக்கின்றன. எனக்கு உத்தரவு கொடுக்கிறீர்களா? ஏன் அம்மா ஷண்முகவடிவு! நான் போய்விட்டு வருகிறேன். உன்னை நான் உன்னுடைய மனிதர்களிடம் கொண்டு வந்துசேர்த்துவிட்டேன். உன்னுடைய அக்காளை நீ உடனே பார்க்கக் கூடவில்லை என்ற ஒரு விஷயத்தைத் தவிர உனக்கு இங்கே வேறே ஒரு குறைவும் இருக்காது. ஐயா உங்கள் தகப்பனாருடைய ஸ்தானத்திலிருந்து உங்களையெல்லாம் காப்பாற்றுகிறவர்கள். அவர்கள்கண்மணியை இமைகள்காப்பதுபோல உன்னை அதிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வார்கள். நானும் மறுபடியும் நாளையதினம் இங்கே வந்து உன்னைப் பார்க்கிறேன். உன்னுடைய அக்காளைப் பார்க்க வேண்டும் என்ற அவாவும் என் மனதில் பூர்த்தியாக இருக்கிறது. நான் போய் விட்டு வருகிறேன். கண்ணம்மா இந்தக் குழந்தையை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள்ளம்மா' என்று கூறிய வண்ணம் ஸோபாவை விட்டு எழுந்து நின்று-ஜெமீந்தாரிடம் விடை கேட்பவள்போல அவரை நோக்கி, அவர், “ஏன் நீங்களும் இங்கே இரண்டொரு நாள் இருந்துவிட்டுப் போகிறது தானே! அங்கே என்ன அவசர வேலை இருக்கப் போகிறது?" என்று நயமாக மொழிந்தார். அம்மணிபாயி, "இல்லை இல்லை. நாளைக்குக் காலையில் நான் மறுபடியும் வருகிறேன். நான் இருபது தினங்களாக ஊரில் இல்லாதிருந்து இன்றுதானே வந்தேன். முக்கியமான சில காரியங்களைக் கவனிக்க வேண்டும். நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன்' என்று முடிவாகக் கூறியவண்ணம், ஷண்முகவடிவு, லீலாவதி ஆகிய இருவரையும் பார்த்துத் தான் போவதாகச் சைகை செய்து விட்டுப் புறப்பட்டு அந்த மாடத்தைவிட்டு வெளியில் போய்விட்டாள்.