வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3i S அளவற்ற துக்கமும், மனவேதனையும் காட்டி உண்மைபோல நடித்து, இளவரசர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும்,தாம் உத்தரவு பிறப்பிப்பதாகச் சொல்லி இளவரசர் தம்மால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த கடிதத்தைத் தன்னிடமிருந்து தந்திரமாக வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்ட தாகவும், தாம் விடுதலை செய்ய முடியாதென்று கண்டித்துக் கூறித் தன்னை அவமானப்படுத்தி அரண்மனையை விட்டு வெளிப்படுத்தியதாகவும் கூறிக் கலங்கி அழுதாள். அந்த வரலாற்றைக்கேட்ட மாசிலாமணிப் பிள்ளைக்கு இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. தாம் எப்படியும் தப்பி வெளியில் போய்விடலாம் என்று அவர் கொண்டிருந்த மனோதிடமும், குதுகலமும் திடீரென்று மாறிப்போக மட்டற்ற துயரமும், கலவரமும், பீதியும் அவரது மனதில் குடிகொண்டன. தாம் அதற்குமேல் தப்ப இயலாதென்ற நிச்சயமும், ஏக்கமும், ஏமாற்றமும் உண்டாகிவிட்டன. ஆனால், அவர் தமது மனைவியான லீலாவதி பொய் சொல்லுகிறாளென்று சிறிதும் சந்தேகிக்கவே இடமில்லாமல், அவள் அவ்வளவு திறமை யாகவும் தந்திரமாகவும் உருக்கமாகவும் உண்மைபோலவும் நடித்தாள் ஆகையால், அவளது கபடநினைவு கடைசிவரையில் வெற்றியடைந்தது. அழுத கண்ணும், சின்னாபின்னமாகத் தோன்றிய கேசமும் மார்பிலறைந்து கொண்ட கையுமாக அவள் விசனமே வடிவாய்க் கடைசி வரையில் இருந்து, அவரைப் பெரிய சிறைச்சாலைக்கு முடிவாக அனுப்பிவிட்டுத் தனது பெரிய தந்தையினது மாளிகைக்கு வந்து சேர்ந்தாள். அதன்பிறகு மருங்காபுரி ஜெமீந்தாரும் லீலாவதியும் அடிக்கடி அந்த விஷயத்தைப்பற்றி பேசி, தாங்கள் செய்த தந்திரத்தைப் பற்றித் தமக்குத்தாமே புகழ்ந்து திருப்தி அடைந்தும், மாசிலாமணிப் பிள்ளையைப் பலவாறு துஷித்தும், அளவற்ற ஆறுதலடைந்த வராய் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால், தமது உண்மையான மனப்போக்கை மற்றவர் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானம் கொண்டவர்களாய் அவர்கள்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/315
தோற்றம்