பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 315 கண்ணம்மாள் என்றுமே உறுதியாக நினைத்திருந்தாள். ஆகையால் கமலம் மாரியம்மன்கோவிலில் தங்கியதைப்பற்றித் தான் வருந்தினால், அது அவர்களது மனதிற்குச் சம்மதியாக இராதென்று நினைத்து, அவள் தனது உண்மையான மனநிலைமையை வெளியில் காட்டாமல் பொறுமையே வடிவாக இருந்தாள். மாடப்புறாவைப் போன்ற ஒப்புயர்வற்ற மிருதுத் தன்மையும், உயர்தர வனப்பும், சகலவிதமான கலியான குணங்களும் நிரம் பவும் ஜ்வலிக்க, உத்தமோத்தமியாக விளங்கிய மங்கையர்க்கரசியான ஷண்முகவடிவைப் பார்த்த முதல், மருங்காபுரி ஜெமீந்தாரினது மனம் உன்மத்தங் கொண்டு மயங்கிக் கலங்கித் தவித்து துர்மோக வெறிகொண்டது. தாம் எப்பாடுபட்டாயினும், அவளை வசப்படுத்தி நிரந்தரமாகத் தமக்கு உரியவளாக்கிக் கொள்ளவேண்டும் என்றும், அவள் பொருட்டு தமது உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் பொருட்படுத்தக் கூடாது என்றும், சாம, தான, பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயத்தையும் பயன்படுத்தி அவளது மனதைத் திருப்பவேண்டும் என்றும் அவள் தமது மாளிகைக்குள் இருக்கிறாள் என்பதைத் தமது வேலைக்காரர் கூட அறிந்து கொள்ளாமல் அவளை மறைவான இடத்தில் ஒளித்து வைக்க வேண்டும் என்றும் அவர் உறுதியாக தீர்மானித்துக் கொண்டு, தமது எண்ணத்தை லீலாவதியிடம் ரகசியமாக வெளியிட, அவளும் அதற்கு அனுகூலமாய் இருப்பதாக ஒப்புக் கொண்டாள். ஷண்முக வடிவு அந்த மாளிகைக்கு வந்த அந்த இரவிலேயே தாங்கள் தங்களது கருத்தை வெளியிட்டால்,அதைச் சிறிதும் எதிர்பாராத அந்த உத்தமி அதற்கு எளிதில் இணங்கமாட்டாள் என்று எண்ணி, அன்றையதினம் அவள் எவ்விதச் சம்சயமும் கொள்ளாதபடி நடந்துகொண்டதன்றி, அவளை அபாரமாகப் புகழ்ந்து, சோடசோபசாரங்களைச் சொரிந்து, அவளது மனம் நன்றி யறிதலின் பெருக்கினால் மலர்ந்து அளவற்ற மகிழ்ச்சி