பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்-3 வேண்டுமென்று முடிவுசெய்து கொண்டவனாய் படுத்துத்துங்கி அன்றைய இரவைக் கழித்தான். மறுநாளாகிய ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுது நிரம்பவும் பிரகாசமாகவும், அழகாகவும், மனோரம்மியமாகவும் இருந்தது. அந்த அழகிய லுமிருந்த பூங்காக்களில் ரமணியமாக மலர்ந்திருந்த ரோஜா, செண்பகம், மல்லிகை, ஜாதி மல்லிகை, மனோரஞ்சிதம் முதலிய உன்னதஜாதி மலர்களின் மனமோகன அள்ளி எங்கும் இறைத்து எல்லோரது வண்ணம் 28 பட்டணத்தைச் சுற்றி நறுமணத்தை மனத்தையும் இன்பசாகரத்தில் ஆழ்த்திய மந்தமாருதம் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. மாதுரியமான கனிகளைத் தின்று களிவெறி கொண்டு குதுகலமாக மாமரங்களில் வீற்றிருந்த கோகிலங்கள் தங்களது திங் குரலமுதை அள்ளி இறைத்து தெய்வகீதம் பாடிக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் மங்கள முழக்கங்களும் ஆடல்களும், பாடல்களும், சங்கீதப் பயிர்ச்சியுமே மயமாக இருந்த அந்த அதிசுந்தர நகரத்தின் ராஜா சத்திரத்திலிருந்து புறப்பட்ட நமது யெளவன வீரன் தனக்கு இரு புறங்களிலும் இருந்த அற்புதக் கண்காட்சிகளை எல்லாம் கண்டுகளித்த வண்ணம் உல்லாசமாக நடந்து அரைநாழிகை நேரத்தில் அந்த ஊர்த் தேவாலயத்தை அடைந்து, அதன் பக்கத்திலிருந்த அற்புத விநோதங்களமைந்த சோலைக்குள் நுழைந்தான். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து முதிர்ந்து பெருத்துவிரிந்து படர்ந்து ஆகாயத்தை அளாவி நின்ற எண்ணிறந்த தருக்கள் அடர்ந்திருந்த அந்த இடம் இயற்கையிலேயே அமைந்த மணிப்பந்தல்போல இருந்தது. ஆகையால், தென்றலின் சொகுசும், கனிகளின் கமழ்வும், பறவைகளின் பாடல்களும், கிளிகளின் மழலையும், நிழல்களின் குளிர்ச்சியும் ஒன்றுகூடி அது உண்மையில் சுவர்க்க லோகமோ அல்லது பூலோகமோ என்ற ஐயத்தை உண்டாக்கின. அப்படிப்பட்ட இன்பக் களஞ்சியமான பூஞ்சோலைக்குள் கல்யாணசுந்தரம் நுழைந்த கால்நாழிகை நேரத்திற்குள், தனம்