பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பூர்ணசந்திரோதயம்-3 லீலாவதி அன்றையதினம் தான் எப்பாடு பட்டாகிலும் ஷண்முகவடிவினது மனதை மாற்றி அவள் தனது பெரிய தந்தையின் கருத்துக்கு இணங்கும்படி செய்து, பெரிய தந்தையின் பிரியத்தைப் பூர்த்தியாகச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஷண்முகவடிவை ஒருrண நேரங்கூட விட்டுப் பிரியாமல் அவளிடம் அபாரமான வாஞ்சையும் கவர்ச்சியும் கொண்டுவிட்டவள்போல நடித்து விநாடிக்கு விநாடி அவளுக்குப் பலவகைப்பட்ட உபசரணைகள் புரிந்து அன்பான மொழிகளைச் சொரிந்து ஆசாபாசத்தை வெளிப்படுத்தி, அவளுக்குரிய பணிவிடைகளை எல்லாம் தானே செய்து அவள் தரையில் நடக்க ஸ்கியாதவள்போல நடித்து அவளுடன் கூடவே இருந்து சமயம் பார்த்து கபடமான சொற்களைப் பிரயோகம் செய்துகொண்டே வந்தாள். அவர்கள் இருவரும் தங்களது காலைக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டபின்னர் லீலாவதி ஷண்முகவடிவோடு வெல்வெட்டு மாடத்திலிருந்து சந்தோஷமாக சம்பாஷித்துக் கொண்டிருந்தாள். லீலாவதி நிரம்பவும் குதுகலமாகப் பேசி அடிக்கடி சந்தோஷமாக நகைத்தவண்ணம் உல்லாஸ்மாக இருக்க, அவளது முகதாrணியத்திற்காக ஷண்முகவடிவும் நலிந்து அவளோடு சந்தோஷமான சொற்களைக் கூற முயன்றாள். ஆனாலும் கோலாப்பூரில் நிகழ்ந்த விஷயங்களின் நினைவும், கலியாணசுந்தரத்தைப் பற்றிய நினைவும், தான் எண்ணியிருந்த எண்ணங்கள் எல்லாம் வீணாகிப் போனதே என்ற ஏக்கமும் எழுந்தெழுந்து அவளது கவனத்தைக் கவர்ந்து கொண்டன. ஆகையால், அடிக்கடி அந்த மின்னற் கொடியாளினது வதனம் விகாரமடைந்து வேறுபட்டுத் தோன்றியது. அதை எளிதில் உணர்ந்து கொண்ட லீலாவதி நிரம் பவும் மகிழ்ச்சியாய்ப் பேசத்தொடங்கி, "என்ன ஷண்முகவடிவு ஏன்