பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 323 இவ்விடத்திலுள்ள புதுமனிதர்களிடத்தில் அன்னியோன்னி யமாக இருந்து வருகிறாள் அல்லவா? அதுபோலவே நீயும் இங்கே வந்தபிறகு எங்களோடு அன்னியோன்னியமாகவும் அந்தரங்க சிநேகமாகவும் இருந்துவர ஆரம்பித்தால், பழைய நினைவு தானாகவே மாறிப்போகும். உன்னுடைய அக்காள் இவ்விடத்திலேயே இருக்கிறாள். நீ மாத்திரம் அத்தையை வைத்துக்கொண்டு இனி அந்த ஊரில் என்ன செய்யப் போகிறாய்? நீயோ யெளவனப் பருவப்பெண்; உலகம் பொல்லாதது; நீயும் சும்மா இருக்க, துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் விடமாட்டார்கள் ஆகையால், நீ அந்த ஊருக்குப் போவது உசிதமாகத் தோன்றவில்லை. இனிமேல் நீ உன்னுடைய அக்காளோடு இங்கேயே இருந்துவிடு. யாராவது தக்க மனிதரையும் வண்டியையும் அனுப்பி, உங்கள் அத்தையை இங்கே கொண்டுவந்து விடச் செய்வோம். அதன்பிறகு நீ உன் அக்காளுடைய பிரியப்படி நடந்துகொள்ளலாம்; இதோ என் பெரிய தகப்பனார் இருக்கிறார். இவர் உன் அக்காளை உயிருக்குயிராக மதித்து வருகிறார்; அது போலவே உன்னையும் காப்பாற்றி அளவற்ற பிரியத்தோடு வைத்திருப்பார் ஆகையால், நீ இனி அந்தக் கலியாண சுந்தரத்தின் நினைவை விட்டுவிடு; சந்தோஷமாக இரு' என்றாள். அவளது சொற்களைக் கேட்ட ஷண்முக வடிவு என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாமல் சிறிதுநேரம் தத்தளித்திருக்க, அப்போது ஒரு வேலைக்காரி வெல்வெட்டு மாடத்தின் கதவை மெதுவாகத் திறந்துகொண்டு உள்ளே வந்து லீலாவதியைப் பார்த்து, 'அம் மணி கீழே யாரோ ஒருவர் வந்திருக்கிறார். அவர் உங்களோடு ஏதோ அவசரமான சங்கதியைப் பற்றிப் பேசவேண்டுமாம்" என்றார். அதைக் கேட்ட லீலாவதி திடுக்கிட்டு அது யாராக இருக்கலாம் என்று யூகித்துப் பார்த்தவளாய் வேலைக்காரியை நோக்கி, "வந்திருக்கிறது ஆண்பிள்ளையா, பெண்பிள்ளையா?" என்றாள்.