பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 325 முன் அவள் பார்சீ ஜாதி ஸ்திரீயாக வேஷந்தரித்து இளவரசரை வஞ்சித்த காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்து இளவரசரை வழிமறித்து பலவந்தமாகக் கொணர்ந்தவனும், வென்னிர்அண்டாவில் இறந்துபோன அவளது கள்ளப்புருஷரது பிணத்தைக் கொண்டு போய்க் குழியில் புதைத்தவனும், அதன் பிறகு கடைசியாகத் தங்களது பங்களாவில் அண்ணாசாமி நாயக்கன் என்ற பொய்ப் பெயர் வைத்துக்கொண்டு வந்து ஒளிந்துகொண்டிருந்தவனுமான கட்டாரித்தேவன் என்ற முரட்டுத் திருடன் தனது விடுதிக்குள் வந்து மதுரைவீரன் நிற்பதுபோல மகா பயங்கரமாக நின்றதை லீலாவதி கண்டாள். காணவே அவளது உடம்பு கிடுகிடென்று ஆடியது. குலை நடுக்கம் உண்டாயிற்று; ஸ்கிக்க வொண்ணாத பெருந்திகில் எழுந்து அவளது உச்சி மயிரைப் பிடித்து உலுக்கியது. மயிர்க்காலுக்கு மயிர்க்கால் வியர்வை வெள்ளம் குபிரென்று கிளம்பி அக்கினிக் குழம்பு போல அவளது சர்வாங்கத்தையும் தகித்தது. காலகோடி விஷத்தைக் கொண்ட பெருத்த நாகப் பாம்பின்மேல், கால் வழுக்கி விழுந்துவிட்டவள்போல, அவள் பெருங்கிலியும் நரகவேதனையும் அடைந்து பேரச்சத்தினால் நடு நடுங்கி முன்னால் போவதா பின்னால் போவதா என்பதை அறியாதவளாய் ஸ்தம்பித்து இரண்டொரு நிமிஷ நேரம் நின்ற இடத்திலேயே வேரூன்றி அசைவற்று சித்திரப் பாவை போலவே நின்றுவிட்டாள். அபாரமான திகிலினால் அவளது முகம் வெளுத்து விகாரக்களை அடைந்தது. அவனைப் பார்த்தவுடன், அதற்கு முன் அவன் சம்பந்தப்பட்டிருந்த பயங்கரமான சம்பவங்களின் நினைவுகள் அவளது மனதில் சடக்கென்று தோன்றி அவளது குடலைக் கலக்கின. திடீரென்று பெருத்த பேய் பிசாசுபூதங்களின் முன்னர் கொண்டு வந்து விடப்பட்டவள் போல அவள் பேசுவதற்கு நாவெழாதவ ளாகவும், நடப்பதற்குக் கால் எழாதவளாகவும், இரண்டொரு நிமிஷ நேரம் நின்றபிறகு ஒருவாறுதுணிவடைந்த வளாய் அவனை நோக்கிப் பேசத் தொடங்கி, 'என்ன ஐயா!