பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 என்னும் வடிவழகி அவ்விடத்திற்கு வந்து நாணமும் மகிழ்ச்சியும் அழகும் வடிவெடுத்து வந்ததுபோல அவனுக்கு எதிரில் தோன்றி உலகை மயக்கவந்த மோகினிதேவி போலப் புன்முறுவல் செய்து நின்றாள். அவள் வழக்கத் திற்கு அதிகமாக மகா படாடோபமாகவும் வசீகரமாகவும் அலங்கரித்துக்கொண்டு வந்திருந்ததைக் காணவே கலியான சுந்தரத்தின் கண்கள் அவளைப் பார்க்கவும் கூசின. ஏதோ விபரீதமான கருத்தை மனதில் வைத்துக் கொண்டு அவள் அவ்வாறு வசீகரமாக அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்ற எண்ணம் உடனே உண்டாகிவிட்டது. அதுவுமன்றி, அவளது அக்காள் இல்லாமல், அவள் மாத்திரம் தனியாக வந்திருந்ததும் சந்தேகாஸ் பதமாகத் தோன்றியது. ஆகவே, அவளிடம் அதிகமாகப் பேச்சை வளர்க்காமல், தங்களது சம்பாஷணையைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு போய்விட வேண்டுமென்ற உறுதி செய்து கொண்டவனாய், அந்தச் சுந்தர புருஷன் கீழே குனிந்தபடி அவளை நோக்கி, ‘என்ன தனம்! எங்கே உன்னுடைய அக்காளைக் காணோமே! நீங்கள் இரண்டு பேரும் வருவதாக அல்லவா நீ கடிதத்தில் எழுதியிருந்தாய்?" என்று நயமாக வினவினான். அதைக்கேட்ட தனம் முன்னிலும் அதிக இன்பமாகவும் வசீகரமாகவும் புன்னகை செய்து, நாணிக்கோணித் தனது புருவம், கண்கள், அதரம், மார்பு, கைகள் முதலிய வில்களால் ஆயிரக்கணக்கான மன்மத பாணங்களைத் தொடுத்துக் குலுக்கிப் பிலுக்கிக் கிள்ளை போல அழகாகத் தனது வாயைத் திறந்து, 'நேற்று ராத்திரி அக்காளுக்கு வெகுநேரம் வரையில் தூக்கம் பிடிக்காமல் தவித்திருந்து அகாலத்தில் தூங்கினாள். அதனால், அவள் காலையில் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டே இருந்தாள். நான் அவளை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன்! அவ்ளுடையதுக்கம் தெளியவே இல்லை; நீங்கள் இங்கே வந்து பார்த்து எங்களைக் காணாமல் ஏமாற்றமடைந்து திரும்பி