பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பூர்ணசந்திரோதயம்-3 காரியமாக இருந்தால், நான் அந்தக் காரியத்துக்கு வந்ததாக நீங்கள்மதிக்க வேண்டாம். நான் உங்களிடம் ஒர் உதவியை நாடி வந்ததாகவே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொண்டால் அது ஒரு பெரிய குற்றமாகும் என்று நான் நினைக்க வில்லை. நான் உங்களுக்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்களில் உதவி செய்திருக்கிறேன். அதற்குப் பதிலாக நான் உங்களிடம் ஒர் உதவியை எதிர்பார்ப்பது குற்றமாகாது அல்லவா? ஆகையால், நான் இனி உங்களிடம் வருவதும்; உங்களைப் பார்ப்பதும் உங்கள் மனசுக்குப் பிடிக்காவிட்டால், நான் கோரும் ஒர் உதவியை மாத்திரம் எனக்கு நீங்கள் செய்து விடுவீர்களானால் நான் இனி உங்கள் ஜோலிக்கே வருவதில்லை' என்றான். இதன் தொடர்ச்சி 4ம் பாகத்தில் தொடரும்.....