பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 அவளை நோக்கி, 'தனம்! போதும், போதும், நிறுத்து; இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்க, என்மனம் நாணுகிறது. நீ இவ்விதமான கருத்தோடுதான் இங்கே என்னை வரும்படி எழுதினாயா? அல்லது, உண்மையில் வேறே ஏதாவது சங்கதி பேசப் போகிறாயா? நீ என்னிடத்தில் சிற்றின்ப விஷயமாகப் பேச வந்திருந்தால், அதற்கு நான் தயாராக இல்லை. என் மனசையும் ஆசையையும் முற்றிலும் கவர்ந்து கொண்ட பெண் வேறொருத்தி இருக்கிறாள். அவளை விட்டு என் மனம் வேறே எவரையும் நாடவே இல்லை. உனக்கு மாத்திரம் என்னிடம் ஆசை உண்டாகிவிட்டால், அது போதுமா? என் மனசிலும் உன் மேல் ஆசை உண்டாகவேண்டாமா? என் மனம் உன்னை நாடவே இல்லை. ஆகையால், இந்த வார்த்தையைவிட்டு, நாம் கோரிவந்த காரியத்தைப்பற்றிப் பேசு' என்றான். அதைக் கேட்ட தனம் நிரம் பவும் விசனித்துக் கலங்கிக் கண்ணிர் விடுத்துச் சகிக்க இயலாத சஞ்சலம் அடைந்தவள் போலவும்,காண்போர்மனம் இளகி உருகும்படியாகவும் நைந்து உருகித் தனது கைகளைப் பிசைந்துகொண்டு, "ஐயோ! தெய்வமே! இனி நான் எப்படி உயிர் வாழப் போகிறேன்! எவராலும் சகிக்கமுடியாத இப்படிப்பட்ட பரமதுக்கத்தை நான் எப்படி சகித்திருப்பேன்! இப்படிப்பட்ட உத்தம புருஷரின் மேல் சென்று லயித்த என் மனம் இனி வேறே எந்தப் புருஷரையாவது நாடுமா? ஒருநாளுமில்லை. நான் பிரமான மாகச் சொல்லுகிறேன்-1 என்று ஏதோ உறுதிகூற முயல, அதற்குள் அவளது சங்கடமான நிலைமையைக் கண்டு இரக்கமும் கண்கலக்கமும் மனவருத்தமும் அடைந்த கலியான சுந்தரம் இடைமறித்துப் பேசி, 'தனம்! என்ன இது? அறியாத பெண்ணான நீ இப்படிப்பட்ட வார்த்தைகளை வாயில் வைத்துப் பேசுவதே தகாது. நான் இதற்கு முன் கொஞ்சமும் பழக்கமில்லாத அன்னிய மனிதன். என்னுடைய ஜாதி வேறு, உன்னுடைய ஜாதி வேறு. நீ என்னிடத்தில் இப்படிப்பட்ட