பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 தகுமா? கொஞ்சமும் தகாது. ஆகையால், நீங்கள் என்னை அன்னியளாக எண்ணக்கூடாது. நான் இதுவரையில் செய்ததையும் இப்போது செய்வதையும் குற்றமாக எண்ணாமல் என்பேரில் தயைபாலித்து என்னை ரகவித்தருள வேண்டும். உண்மையில் பார்த்தால் குற்றம் உங்களுடையது என்றே சொல்ல வேண்டும். நீங்கள் இந்த வழியாக வந்து ஏன் என் கண்ணில் பட்டீர்கள்? எங்களோடு கூட ஏன்சகப் பிரயாணியாக வர இணங்கினர்கள்? உங்களுடைய கட்டழகும், நற் குணங்களும் ஏன் என் மனசை மயக்கி மோகிக்கச் செய்து இவ்வளவு தூரம் பாழ் படுத்தியது? இவைகளை எல்லாம் நானாகச் செய்தேனோ? நீங்கள் சாதாரணமாக வழியில் போகும் ஒரு பிரயாணியாக இருக்க, நான் திடீரென்று உங்களிடம் வந்து இப்படிப்பட்ட பிரஸ்தாபத்தைச் செய்திருந்தால், அப்போது நீங்கள் என்னைக் கேவலம் இழிந்த குணமுடைய வளாக நினைக்கவும் , என்னை அருவருப்போடு விலக்கவும் நியாயம் உண்டு; உண்மையில் நடந்த காரியமோ அதுவல்ல. நாங்கள் இருந்த இடத்துக்கு நீங்களே வந்தீர்கள். மன்மதனைப் போன்ற உங்களுடைய அழகையும், மகா விஷ்ணுவைப் போன்ற கலியான குணங்களையும் கோடி சூரியப் பிரகாசம் போல ஒரே ஜோதியாக வீசி, என்னுடைய உயிரையும், மனசையும், அறிவையும் அடியோடு கொள்ளை கொண்டுவிட்டீர்கள். நீங்கள் காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக என்னுடைய மனசைக் கவராமல், ஒரே நொடியில் கண்பொறி தட்டுவதுபோல, என்னை மயக்கி பிரமிக்கச் செய்து விட்டீர்கள். அப்படியிருக்க, என் மனம் உங்கள் விஷயத்தில் பிரியம் கொள்ளாதிருக்கச் சாத்தியப்படுமா? உங்கள் விஷயத்தில் என் மனசில் எழுந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் காதல் தீய்க்கு ஏதாவது அளவு சொல்லமுடியுமா? ஒரு நாளும் முடியாது. அழகே உருவெடுத்தவைபோல ஜ்வலிக்கும் உங்களுடைய கண்களைக் கொண்டும், தேவாமிருதம் போல இனிக்கும் உங்களுடைய